கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் புகழ்பெற்ற விளையாட்டு ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடலாம்...
1. இதுவும் ஒருவகைக் கிழங்குதான், ஆனால் வெள்ளையாக இருக்கும்...
2. மற்றவர்கள் மேல் காட்டும் அக்கறைக்கு மற்றொரு பெயர்.
3. லாக் டவுன், கடையடைப்பு என்பதைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்...
4. இவன் நல்லவன் அல்ல...
5. வெளிச்சம் சிறிதும் இல்லாத அறை...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. முள்ளங்கி
2.கரிசனம்,
3.முடக்கம்,
4. கெட்டவன்,
5. இருட்டறை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல்: கிரிக்கெட்