சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

19th Sep 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 


கேள்வி: பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளுமா? அப்படியானால் எப்படி??

பதில்: நம்மைப் போல சிந்தனாசக்தி, கற்பனை ஆகியவை கொண்ட புத்திசாலி மூளை பறவைகளுக்கு இல்லை. இதனால் அவற்றின் பாஷையில் வார்த்தை ஜாலங்கள், சொற் பிரயோகங்கள் எதுவும் கிடையாது. ஏதோ கத்தும், கூவும்... அவ்வளவுதான்.

சந்தோஷம், சோகம், ஆபத்து, பசி ஆகிய உணர்வு களை வெளிப்படுத்த சில சங்கேத சைகைகளை வைத்திருக்கின்றன.

ADVERTISEMENT

இவற்றை வைத்துக்கொண்டுதான் தங்களது வாழ்க்கைப்பாட்டைப் பார்த்துக் கொள்கின்றன, பாவம்.

இந்த சங்கேத சைகை சப்தங்களை மற்ற உயிரினங்கள் எதுவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

ஆனால், பயத்தினால் அவை எழுப்பும் குரலை மட்டும் மற்ற பறவையினங்கள் எளிதில் புரிந்து கொள்கின்றன என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT