பேராசையுடன் பணத்தைச் சேர்ப்பவன் திருடனை உருவாக்குகிறான்.
- லாட்சு
உங்கள் புகழையோ, கல்வி முதலிய சிறப்பையோ நீங்களே புகழ்ந்து பேச வேண்டாம்.
- ஒளவையார்
எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதுங்கள்.... அதனால் விடுதலை அடைவீர்கள்.
- பாரதியார்
இனிய சொற்களில் நட்பு தழைக்கும். கடுஞ்சொற்கள் பகையைத் தூண்டும்!
- மகாவீர்
மனம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகிவிடும்!
- விவேகானந்தர்
கடவுள் வழிபாட்டை தனக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்காகவும் செய்ய வேண்டும்.
- வள்ளலார்
தெய்வங்களின் பெயரால் மிருகங்களை பலியிடக்கூடாது. மாமிசம் உண்பவர்களைக் கண்டால் என் உள்ளம் கலங்குகிறது.
- வள்ளலார்
தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
- சிவானந்தர்
பெருமை பேசுவதில் பயனில்லை. உன்னிலும் சிறந்தவர் ஏராளமாக இருக்கிறார்கள்!
- பகவான் ராமகிருஷ்ணர்
எல்லா மனிதர்களிடத்தும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் சில மனிதர்களே உள்ளனர்.
- பகவான் ராமகிருஷ்ணர்