சிறுவர்மணி

வியாசரின் பொன்மொழிகள்!

31st Oct 2020 06:00 AM | அ.ப. ஜெயபால் சேத்தியாத்தோப்பு

ADVERTISEMENT


சாத்விகமான ஒரு மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும்.

எண்ணம், சொல், செயல் அனைத்திலும் மனிதன் அடக்கத்தைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும்.

இறைவனுக்குப் படைத்த பின்னரே தினமும் உணவை உண்ண வேண்டும்.

அறத்துடன் கூடிய வழியில் செல்வத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு அதனைக் கொண்டு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

இறைவனை நினைப்போர்க்கு குறைவு ஏதும் ஏற்படாது.

அறம் என்னும் தோணியில் வாழ்க்கைக் கடலை எளிதாகக் கடக்கலாம்.

ஆசையற்றவனுக்கு அறிவு சிறப்பாக இருக்கும்

அறத்தில் நம்பிக்கை அற்றவனுக்கு வாழ்வில் பிடிப்பு இருக்காது.

சத்தியம் அடக்கத்தைக் கொடுக்கும். அடக்கத்தினால் பேரின்பத்தை அடையலாம்.

கடவுளைச் சரணடைவதே கல்வியின் பயன்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT