சிறுவர்மணி

கருவூலம்: பறக்கும் கார்!

31st Oct 2020 06:00 AM

ADVERTISEMENT


ஜப்பானில் சாலைப் போக்குவரத்து பெருகி வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண முயற்கிசள் எடுக்கப்படுகின்றன. பறக்கும் கார்களை உருவாக்குவதில் சில நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023-ஆம் ஆண்டுக்குள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களைத் தயாரிக்கப் போகிறார்களாம்! பிறகு 2030-க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு வரப் போகிறதாம்! 

ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்ற நிறுவனம் ஒரு கார் தயாரித்துள்ளது. அதில் 4 பேர் பயணம் செய்யலாம். இந்தக் கார் பேட்டரியில் இயங்கும். கார் சற்று பெரிதாக இருக்கிறது. "க்வாட்காப்டர்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். ட்ரோன் போன்ற தோற்றத்தில் உள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இந்தக் காரை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். மேல் நோக்கி எழுந்த இந்தக் கார் 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்திற்கும் மோலாகப் பறந்து பின்னர் தரை இறங்கியது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக என்.இ.சி. நிறுவனம் கூறியது. 2026 - ஆம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என இந்த நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT