சிறுவர்மணி

பாப்பா நடத்தும் பாடம்!

31st Oct 2020 06:00 AM | - கிருங்கை சேதுபதி

ADVERTISEMENT

 

குரங்கு புலி, கரடியெல்லாம் 
அமைதியாகவே
கூடியிருந்து பாடம் கேட்குது
எங்கள் வீட்டிலே

உயரமான நாற்காலியில் 
டீச்சராகியே
உரத்த குரலில் பாடம் எங்கள் 
பாப்பா நடத்துறார்!

"அ'கரம் முதல் "ஒü' வரையில் 
எழுதிக் காட்டுறார்!
அதனைப் போலே "ஏ, பி,சி,டி' 
சொல்லிக் காட்டுறார்!

ADVERTISEMENT

ஆட்டத்தோடு பாட்டுப் பாடிக் 
கதையும் சொல்லுறார்!
அமைதியாகக் கேட்கச் சொல்லி 
"உஸ்...உஸ்' என்கிறார்!

இடையிடையே சின்னத் திரையின் 
படத்தைக் காட்டியே 
எளிமையாக அதன் கதையும் 
எடுத்துச் சொல்கிறார்.

விடுகதைகள் போடுகிறார்
விடையும் தருகிறார்!
வேடிக்கையாய்க் குரல் எழுப்பி 
நடித்தும் காட்டுறார்!

கடுமையான கணக்குப் பாடம் 
எளிமையாகவே 
கற்றுக்கொள்ள விரல்கள் நீட்டிச் 
சொல்லிக் காட்டுறார்!

விடுமுறைதான்... ஆனபோதும் 
வெளியில் போகாமல் 
வீட்டில் இருந்து பாடம் சொல்லும் 
பாப்பா சமர்த்துதான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT