சிறுவர்மணி

அரங்கம்: சரக்கு!.... பல சரக்கு!

உஷாதீபன்

காட்சி - 1

இடம் - வீடு
மாந்தர் - விஜயலட்சுமி-அம்மா, சதாசிவம்-அப்பா மற்றும் சீனு, ரமேஷ், கார்த்திக்-மூன்று மகன்கள்மற்றும் இவர்களது நண்பன் வினய்.

விஜயலட்சுமி - பைகள் எடுத்திட்டீங்களா...
மூவரும் - (ஒருமித்த குரலில்) .... ஆச்சும்மா!
விஜயலட்சுமி - வினய்...நீ இவங்களோட போறியா...இல்ல இங்க உட்கார்ந்து பாடம் எழுதப் போறியா?
வினய் - ஆன்ட்டி...நானும் போறேன்...இவங்களோட சேர்ந்து நானும் தெரிஞ்சிக்கிறேன்.
விஜயலட்சுமி - குட் பாய்...அப்போ உங்கம்மாட்ட நான் சொல்லிடுறேன்.. வினய் கொஞ்சம் லேட்டா வருவான்னு....இங்கயே டிபன் சாப்டுட்டுப் போகலாம்...சரியா...?
வினய் - ஓ.கே. ஆன்ட்டி..... - நால்வரும் இறங்கி நடக்கிறார்கள். விஜயலட்சுமி - வீதில போகும்போது இடது ஓரமாப் போகணும்....பின்னாடி வர்ற வண்டி, முன்னாடி வர்ற வண்டி இரண்டுக்கும் அதுதான் வசதி....நமக்கும் பாதுகாப்பு...
சதாசிவம் - இந்த நாலு சாமான்கள வாங்குறதுக்கு இந்தப் பொடிப் பசங்களப் போய் அனுப்புறியே...நான் போக மாட்டேனா...? இதுக்கு நாலு பேரா?
விஜயலட்சுமி - வயசு பதினஞ்சு, பதிமூணு, பன்னெண்டுன்னு ஆச்சு...இன்னும் என்ன பொடிப் பசங்க....உலகத்தையே அளந்துட்டு வருவாங்க.... பக்கத்துலதானே இருக்கு ஸ்டோர்...பழகட்டும்.....

காட்சி-2

இடம் - நீண்ட வீதி
மாந்தர் - சீனு, ரமேஷ், கார்த்தி, வினய்....

சீனு - டேய்...அம்மா கொடுத்திருக்கிற லிஸ்டை நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்களா....?
ரமேஷ் - கடைல லிஸ்ட்டைக் காண்பிச்சு எடுத்துக்குடுன்னா குடுக்கறான்...அவ்வளவுதானே?
கார்த்திக் - டே...டேய்...அம்மா அதுக்காகவா நம்பளை அனுப்பிச்சிருக்காங்க...நாமளே பார்த்து கரெக்டா எடுத்திட்டு வரணும்னுதான்...
(மந்த்ரா டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் என்ற கடையின் பெயரைப் படித்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள்)
சீனு - டேய்...கொண்டு வந்த பைகளை வாசல் கவுன்டர்ல கொடுத்து டோக்கன் வாங்குங்க..
ரமேஷ் - ஏற்கெனவே தெரியுமா இதெல்லாம் உனக்கு...?
சீனு - அம்மா கூட வந்திருக்கேன்ல...அப்ப கவனிச்சது.
(பைகளைக் கொடுத்து டோக்கன் பெறுகிறான் ரமேஷ்)
சீனு - டே...டேய்..அதோ ப்ளாஸ்டிக் பக்கெட் இருக்கு ரெண்டு எடுத்துக்குங்க...அதுலதான் சாமான்களைப் போடணும்....
( எடுத்துக் கொள்கிறார்கள்)
சீனு - முதல்ல அரிசி....இதோ இருக்கு பார்... ல்ர்ய்ய்ண் ழ்ண்ஸ்ரீங் 1 ஓஞ். ன்னு....அதுல நாலு பாக்கெட் எடு...அதாவது 4 கிலோ....
ரமேஷ் - சாதம் வடிக்கிற அரிசிதானடா....அம்மா தோசை பண்ணுவாங்களே....டிபன்...?
கார்த்திக் - கரெக்டா கேட்ட...சாப்பாட்டு அரிசிதான் இது. தோசை அரிசின்னா...அது புழுங்கல் அரிசி...இதோ இப்டி இருக்கும்....பார்த்தியா....ண்க்ப்ஹ் ழ்ண்ஸ்ரீங் ன்னு போட்டிருக்கு...-
ரமேஷ் - உனக்கெப்டிடா தெரியும்...?
கார்த்திக் - வீட்டுல பார்த்திருக்கேன். அம்மா சொல்லியிருக்காங்க... சரி....ஜீனி பாக்கெட் எடு.....கவனம்...அதுல பொடி ஜீனி, பெருஞ் ஜீனின்னு இருக்கு....நல்லா குறு குறு குறுன்னு பொடிய்யா இருக்கும்...அந்தப் பாக்கெட்டைப் பார்த்து எடு...ரெண்டுக்கும் விலையே கொஞ்சம் வித்தியாசப்படும்...
சீனு - பார்றா...என்னா போடு போடறான்னு....? எப்டித் தெரிஞ்சி வச்சிருக்கான் பார்த்தியா?
கார்த்திக் -சரி விடு...இப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கத்தானே போறோம்...புளி எழுதியிருக்காங்கல்ல அம்மா....அதோ இருக்கு பார்....அந்தப் பாக்கெட்டை எடு....
ரமேஷ் - இதோ இங்கயே இருக்கே....
சீனு - அதான் கவனமாயிருக்கணும்...இது புதுப் புளி.....அம்மா பழம்புளிதான் வாங்கணும் சொல்வாங்க...அதுதான் குழம்புக்கு நல்லாயிருக்கும்...அரை கிலோதான் போட்டிருக்காங்க..... பாக்கெட்டைக் கவனிச்சு எடு......
அடுத்து....சொல்லுடா....ஓ...!லிஸ்டே எங்கிட்டதான் இருக்கோ... நான்தானே சொல்லணும்...? வெல்லம்... எங்கேயிருக்கு பாரு.....
ரமேஷ் - அது எதுக்குடா...?
சீனு - பாயசம் வைப்பாங்க...இது ஒரு கேள்வியா? டே...டேய்...அது அச்சு வெல்லம்...அம்மா சொல்லியிருக்கிறது மண்டை வெல்லம்....பெரிய பெரிய உருண்டையா அதோ இருக்கு பாரு...அதுல ஒண்ணு எடு.... அரைக் கிலோன்னு போட்டிருக்கா பாரு....
கார்த்தி - ஆமடா....ஹாஃப் கேஜின்னு இருக்கு....
சீனு - அதேதான். இந்தப் பக்கெட்ல போடு.....அடுத்து.... மிளகாய் வற்றல் ....இந்த வரிசைல கடைசில அடுக்கியிருக்காங்க பார்.. - ஓடு
கிறான் கார்த்தி...
ரமேஷ் - இர்றா...நான் எடுக்கிறேன்... என்று பாய்ந்து ஒரு பாக்கெட்டை எடுத்து வருகிறான்.
சீனு - டே..டேய்...இது குட்டை மிளகா...அம்மா எழுதியிருக்கிறது நீட்ட மிளகா...
அடுத்த வரிசைல இருக்கு பாரு.....
ரமேஷ் - அது வேறேயா...என்னெல்லாம்தாண்டா வித்தியாசம் இருக்கு...? ஏன்...இந்த மிளகாய் உரைக்காதா?
சீனு- அது சாம்பார் பொடி அரைக்கிறபோது வாங்குவாங்க...சமையலுக்கு இதுதான்.....
எனக்கு நல்லாத் தெரியும்.....
கார்த்தி - உனக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே...அப்புறம் நாங்க எதுக்கு? நாங்க பாட்டுக்கு விளையாடுவோம்ல.....?
ரமேஷ் - ஏண்டா....நாமளும் தெரிஞ்சிப்போம்டா...சீனு அண்ணாவுக்குத் தெரிஞ்ச மாதிரி நாளைக்கு நம்மள மட்டும் அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்கன்னா?
தப்பில்லாம வாங்க வேணாமா?
சீனு - சரி...சரி...அடுத்த சாமான்.....கடுகு...
கடுகு......அப்புறம் பாசிப்பருப்பு...... - சொல்லிக் கொண்டே போய் எடுக்கிறான். கார்த்தியும் ஒன்று எடுத்து வருகிறான்.
சீனு - கார்த்தி...அதை அங்க வச்சிடு...அது பொடிக் கடுகு....இதைப் பாரு...இதுதான் நம்ம அம்மா வழக்கமா பயன்படுத்துற சமையலுக்குத் தாளிக்கிற பெருங்கடுகு....வித்தியாசம் தெரியுதா?....இதத்தான் நிறைய வீடுகள்ல பயன்படுத்துவாங்க.....
கார்த்தி - அப்போ அது...?
சீனு - அதுவும் சமையலுக்குத்தான்.....விருப்பம் போல எடுப்பாங்க... நம்ம அம்மா யூஸ் பண்றதத்தானே நாம வாங்கணும்...இல்லன்னா போய் திருப்பிக் கொடுத்திட்டு பெருங்கடுகு வாங்கிட்டு வான்னு அனுப்புவாங்கல்ல...? கார்த்தி - சரிடா.....நீதான் கரெக்டா சொல்றியே...! அப்புறம் எதுக்கு மாத்திக்கிட்டு.....இந்தா பாசிப்பருப்பு....
சீனு - வெரி குட்...எங்க பாசிப்பயறுன்னு போட்டிருக்கிறத எடுத்திருவியோன்னு நினைச்சேன்...பயறு வேறே...பருப்பு வேறே.... சன் ஃப்ளவர் ஆயில்னு போட்டிருக்கும் பாரு...அந்தப் பாக்கெட்டுல ஒரு கிலோ ஒண்ணு எடு....
ரமேஷ் - நான் எடுக்கிறேன்டா....வேகமாய்ப் போய் எடுத்தான். சரசரவென்று அடுக்குகள் குலைந்தன.
சீனு - மெதுவாடா...திட்டப் போறாங்க....என்ன அவசரம்...? பார்த்து நிதானமா எடுக்க மாட்டியா? பாக்கெட் பிரிஞ்சு எண்ணெய் வழிஞ்சிடுச்சின்னா?
ரமேஷ் - ஸôரிடா...... கலர்ஃபுல்லா இருந்திச்சா... அதான் ஓடிப் போய் டக்குன்னு எடுத்திட்டேன்.
சீனு - ஓ.கே....ஓ.கே.....அவ்வளவுதான் லிஸ்ட் முடிஞ்சிச்சு......வாங்க போவோம்....
கார்த்தி - டே...டேய்...முறுக்கு பாக்கெட் ஒண்ணு எடுத்துக்குவோம்டா....
சீனு - அம்மாதான் வீட்ல செய்து தர்றாங்கல்ல....அது போதாதா? இதை ஏன் வாங்கினேன்னு என்னத்தான் திட்டுவாங்க...நோ...நோ...... (கார்த்தி முகம் சுருங்கிப் போகிறது-அதை வினய் கவனிக்கிறான்)
வினய் - அம்மாட்ட நான் சொல்றேன்டா...ஒண்ணும் சொல்ல மாட்டாங்க...முறுக்கு மட்டும் எடுத்துக்கோ.....
(சாமான்களோடு வீடு வந்து சேருகிறார்கள் நால்வரும்)

காட்சி - 3

இடம் - வீடு
மாந்தர் - சதாசிவம், விஜயலட்சுமி, சீனு, கார்த்திக், ரமேஷ், வினய்.

வினய் - ஆன்ட்டி...ஆசையா ஒரு முறுக்கு பாக்கெட் மட்டும் எடுத்தோம்...திட்ட மாட்டீங்களே...?
விஜயலெட்சுமி - உங்கள நான் திட்டுவேனாடா கண்ணுகளா...நீங்க தெரிஞ்சிக்கணும்னுதான் கடைக்கே அனுப்பிச்சேன்.... முறுக்குக்கு பதிலா ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் எடுத்திருக்கலாமே...!உடம்புக்கும் நல்லது....- என்றவாறே அனைவரையும் டிபன் சாப்பிட அழைக்கிறாள்.
சதாசிவம் - நல்ல ப்ராக்டிஸ் பசங்களுக்கு.... ஒண்ணொண்னா தெரிஞ்சிக்கதானே வேணும்...அன்றாட நடைமுறை அவசியங்களாச்சே இது....! டேய் பசங்களா...சுக்குமி - லகுதி - பிலி-ன்னா என்னன்னு தெரியுமாடா உங்களுக்கு? - சொல்லிவிட்டுச் சத்தமாய்ச் சிரிக்கிறார்.....
 

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT