சிறுவர்மணி

விடுகதைகள்

24th Oct 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

1.பாயைச் சுருட்டவும் முடியாது, அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது....
2.காட்டில் உள்ள குடை வீட்டில் இல்லாத குடை...
3.கிண்ணம் நிறையத் தண்ணீர் இருக்கு, குருவி குடிக்க வழியில்லை...
4.இரத்தத்தில் வளர்வது, ஆனால் இரத்தம் இல்லாதது.
5.பற்கள் பல உண்டு, ஆனால் கடிக்கத் தெரியாது...
6.தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்....
7.ஆடையோ கருப்பு, சுழன்று சுழன்று ஆடுவதோ நாட்டியம், ஆனால் வருவதோ பாட்டு....
8.வெட்டிக் கூறுபடுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை...
9.மூன்று நிறக் கிளிகளாம், கூண்டுக்குள் போனால் ஒரே நிறமாம்...


விடைகள்

1.வானம், நட்சத்திரங்கள்.  
2. நாய்க்குடை (காளான்).  
3. இளநீர்.
4. நகம்.
5.  சீப்பு. 
6.  தவளை.
7. இசைத்தட்டு
8. சீட்டுக்கட்டு. 
9. வெற்றிலை, பாக்கு, |சுண்ணாம்பு

ADVERTISEMENT

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT