சிறுவர்மணி

கலைவாணி!

24th Oct 2020 06:00 AM | - கலிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி

ADVERTISEMENT

 

வெண்ணிற புடவை அணிந்தவளாம்
வீணை கரத்தில் உடையவளாம்!
வெள்ளைத் தாமரை மீதமர்ந்து
வெண்ணிற மாலை அணிந்தவளாம்!

புத்தகம் சுமந்த தேவி அவள்! - ஜப
மாலை கையில் ஏந்தியவள்!
அன்ன வாகனம் அவளுக்கு 
அறிவை ஊட்டும் கலைவாணி!!

கல்விக் கடவுள் ஆனவளாம்
காலம் கடந்து நிற்பவளாம்!
வாக்கைச் சிறக்கச் செய்பவளாம்
வாழ்வில் சுடரொளி வீசுபவள்!

ADVERTISEMENT

வல்ல புலமை அளிப்பவளாம்
வேண்டும் வரத்தைத் தருபவளாம்!
அறிவிற் சிறந்த பெரியோர்கள் 
புகழும்படியாய்  அவள் செய்வாள்!

அறிவும் அவளது அருளால்தான்!
புகழும் அவளது அருளால்தான்
அதனால் செருக்கு கொள்ளாமல்
அன்புடன் வாழக் கருணை புரி!

அடக்கம் தந்து அருள்வாய் நீ
அருள்வாய் எனக்கு ஞானத்தை
அவனியில் சிறப்புடன் வாழ்வதற்கு
அருள் செய் அம்மா கலைவாணி!

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT