சிறுவர்மணி

கடி

24th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

""நேத்து ரமேஷ் என்னைத் தள்ளி விட்டான்!.... நான் அவனுக்கு சாக்லேட் கொடுத்தேன்!''
""ஏன்?''
""ஊஞ்சல்லே உக்கார வெச்சுத் தள்ளிவிட்டான்!''

எஸ்.பி.விஜயராஜகோபாலன்,
சென்னை - 600090.

 

ADVERTISEMENT

"" ஒரு நாள் பாட்டி வடையை சுட்டுக்கிட்டு இருந்தாங்கடா....''
""அப்புறம் என்ன?''
""அப்புறம் ஒரு காக்கா வடையை சுட்டுச்சு!''
""என்னது இது?.... வடையை சுட்டது பாட்டியா?... காக்காவா?'' 

கே.விஜயலட்சுமி,
திருப்பத்தூர் - 635601.

 

 

""ரொம்ப நேரம் சார்ஜிலே போடாதேடா!..... பாட்டரி வெடிச்சுடும்!''
""கவலைப்படாதே!....நான் பேட்டரியை கழட்டி வெச்சுட்டுதான் சார்ஜிலே போட்டிருக்கேன்!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

 

""அங்கிள் குமார் சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போனானா?''
""இல்லையே,.... கால்நடையாத்தான் போனான்!''
""குமார் எப்போ கால்நடையா மாறினான்?''

ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.

""நம்ம பாபு கடலைத் தாண்டிட்டான்!''
""எப்படிடா?''
""கடலை காயப்போட்டிருந்தோம்!.... அதைத் தாண்டிப் போயிட்டான்!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605602.


 ""சுரேஷுக்கு டிக்ஷனரின்னா ரொம்பப் பிடிக்கும்!''
""ரொம்ப அகராதி பிடிச்சவன்னு சொல்லு!''

அக்ஷயராம்,  
திருநெல்வேலி டவுன் - 627006.
 

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT