சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

24th Oct 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT


நாம் வாழும் பூமிக்கும் நமக்கு ஒளி தரும் சூரியனுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதை சரியாகக் கணக்கிட்டிருக்கிறார்களா?

பதில்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குத்து மதிப்பாக 93 மில்லியன் மைல்கள்.

ஒளிதான் மிக வேகமாகப் பயணிக்கும் என்று படித்திருப்பீர்கள். இந்த ஒளி கூட சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சரி, நாம் சூரியனை அடைவதற்கு எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் ஆகும்?

ADVERTISEMENT

மணிக்கு 550 மைல்கள் வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் நாம் பயணித்தால் சூரியனைச் சென்றடைய 19 ஆண்டுகள் ஆகும்.

மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் செல்லும் காரில் பயணத்தால், சூரியனை அடைய 177 ஆண்டுகள் ஆகும்.

அரிஸ்டார்கஸ் என்ற கிரேக்க விஞ்ஞானிதான் முதன் முதலில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டார் என்று கூறப்படுகிறது. இவர் கணக்கிட்டுச் சொன்னது கி.மு.250-இல் என்கிறார்கள்.

மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் கணக்கிட்டது 1653-ஆம் ஆண்டில்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT