சிறுவர்மணி

கடி

17th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

""என்னடா அவன் பேரு கோதண்ட பாணின்னு சொன்னே,..... அவன் பேரு 
தண்டபாணியாமே?''
""..."கோ'.... அவனோட இனிஷியல்டா..... அதைச் சேர்த்துச் சொன்னேன்!''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

 

ADVERTISEMENT

""வீட்டுக்கு வீடு வாசப்படின்னுதானே சொல்லுவாங்க,...... அந்த ஆண்டி என்னவோ,  வீட்டுக்குவீடு மாடிப்படின்னு சொல்றாங்களே...''
""அவங்க அபார்ட்மென்ட்லே மூணாவது ஃப்ளோர்லே இருக்காங்க!''

கோ.வினோத், 3/189,  
கிருஷ்ணாபுரம் - 627011.

 

""எங்கிட்டே பூதக் கண்ணாடி இருக்குடா!''
""பூதம் எல்லாம் உனக்கு ஃபிரெண்டா?.... அதோட கண்ணாடியெல்லாமா வெச்சுக்
கிட்டிருக்கே?''

ஆர்.எம்.அக்ஷயராம்,
திருநெல்வேலி.

 

""என்னது இது?.... கணக்குப் பரீட்சை விடைத்தாள்லே   தமிழ், சமூகவியல், 
அறிவியல் கேள்விக்கெல்லாம் பதில் 
எழுதியிருக்கே?....  
""ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதுக.... ன்னுதானே கேட்டிருந்தது!''

டி.மோகன்தாஸ், 
நாகர்கோயில், 629001.

 

""எதுக்கு பாக்கெட் பாலை எடுத்துக்கிட்டு இப்படி ஓடறே?''
என் ஃபிரெண்டு விளையாடறதுக்கு இதை எடுத்துக்கிட்டு வரச் சொன்னான்!''
""அது பாஸ்கெட் பால்டா!''

ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.


""என்னடா உங்க தாத்தா முடி பளீர்னு வெள்ளையா இருக்கு!''
""ஷாம்பு போடறதுக்கு பதிலா ஷர்பு போட்டுக் குளிச்சிட்டார்டா!''

தீ.அசோகன்,
சென்னை.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT