சிறுவர்மணி

விடுகதைகள்

17th Oct 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 


1. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன்...
2. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான்..
3. என்னைத் தெரியாதபோது தெரிந்து கொள்ள ஆவல் வரும்... தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ள ஆசை வரும்...
4.உடம்பில்லா ஒருவன், பத்துக்கும் மேல் சட்டை அணிந்திருப்பான்...
5. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்க்காது... திருடனுக்கு 
என்னைப் பிடிக்காது...
6. கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார், ஆனாலும் நல்லவர்...
7. இளமையிலே பச்சை, முதுமையில் சிவப்பு, குணத்திலோ எரிப்பு...
8. மரம் வழுக்கும், காய் துவர்க்கும், பழம் இனிக்கும்....
9. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்து விடும்...


விடைகள்


1. மழை நீர்    
2. கதவு    
3. ரகசியம்
4. வெங்காயம்    
5. நாய்
6.  தையற்காரர்    
7. மிளகாய்
8. வாழை    
9.  கார்த்திகைப்பூ

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT