சிறுவர்மணி

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

3rd Oct 2020 06:00 AM | எம் . ராதாகிருஷ்ணன்,  வாணியம்பாடி.

ADVERTISEMENT

உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்துத்தான் உடல் ஆரோக்கியமும் மனவளமும் அதிகரிக்கிறது.

ஆடம்பரமும் சுதந்திரமும் ஒன்றாகாது. நம்முடைய பொருளாதார நிலவரத்திற்கு ஏற்றபடிதான் வாழ்க்கை நடக்க வேண்டும்.

அழகு என்பது ஆடையிலும் ஆபரணங்களிலும் காண முடியாது. பணியாற்றுவதில்தான் உண்மையான அழகு பரிணமிக்கிறது.

இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்.

ADVERTISEMENT

மன உறுதியைப் பொறுத்துத்தான் உடலின் பலம் அமைகிறது.

அன்பு உள்ள இடமே அருமையான பள்ளிக்கூடம்.

தற்பெருமை மறையும்போது ஒழுக்கம் துளிர்விடுகிறது.

செய்த தவறை ஒப்புக்கொள்வதே தன்மானத்தின் சிகரம்.

வரவு செலவு கணக்குகளைச் சரியாக எழுதி வைக்கும் பழக்கத்தை மேற்கொள்வாயாக. சிக்கனம் தானே வந்துவிடும்.

தவறுகள் ஏற்படுவது சகஜம். ஆனால் அதைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது பெரும் தவறு!

ADVERTISEMENT
ADVERTISEMENT