சிறுவர்மணி

கடி

3rd Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

""ராமு, இப்பத்தான் தெரியுது,..... கடவுள் ஏன் நமக்கு ரெண்டு காது கொடுத்துருக்கார்னு!''
""ஏன்?''
""மாஸ்க் மாட்டறதுக்கு!''

டீ. என் . பாலகிருஷ்ணன்,
சென்னை.

 

ADVERTISEMENT

""இந்த இடிஞ்ச கோட்டையை யாரு கட்டினது தெரியுமா?''
""இன்னும் இடிஞ்சுதானே இருக்கு!.... யாரும் கட்டலையே...''

கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602.

 

""டேய் ரங்கா,..... உனக்கு இங்கிலீஷ் டீச்சர் பிடிக்குமா?.... கணக்கு டீச்சர் பிடிக்குமா?''
""கணக்கு டீச்சர்தான்!''
""ஏன்?''
""அவங்கதான் அடிக்கடி லீவு போடுவாங்க!''

தீ.அசோகன்,
சென்னை.

 

""முரளிக் கண்ணு,.... ஆட்டுக்கு எத்தனை கால்?''
""ஒண்ணு!''
""நோ!.... நாலு கால் செல்லம்!''
""நாலு கால் ஒண்ணுதானே!''

ஞா . பிரபு, கேணிக்கரை.

 

""ஸ்கூல்லே நீ சரியாவே நடக்க
மாட்டேங்கறியாமே!.... டீச்சர் சொன்னாங்க!''
""ஷூ ரொம்ப சின்னதா இருக்குப்பா!''

அ . யாழினி பர்வதம்,
சென்னை - 600078.

 

""அதோ பார்றா!.... பூனை வாயிலே எலியைக் கவ்விக்கிட்டுப் போகுது!''
""அது உன்னோட மாஸ்க்டா!''

ஆர் . எம் . அக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT