சிறுவர்மணி

சொல் ஜாலம்

28th Nov 2020 04:43 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழாவின் பெயர் கிடைக்கும். 
எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். முயற்சியுங்கள்...

1.  மேடையில் உட்கார்ந்திருந்தாலும், இரண்டு பக்கமும் அடிதான்...
2. இந்த நகரம் நேபாளத்தில் இருக்கிறது...
3.  சுளை சுளையாய் இனிப்பு தரும் மரம்...
4. இது ஓட ஓட காலமும் ஓடும்...
5. இது இருந்தால் போதும் எடுத்த காரியம் வெற்றி தான்...

விடை: 

ADVERTISEMENT

கட்டங்களில் வரும் 
சொற்கள்
1. மத்தளம்,  
2. காத்மண்டு,  
3. பலாமரம்,  
4. கடிகாரம்,  
5. நம்பிக்கை.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : மகாமகம்

ADVERTISEMENT
ADVERTISEMENT