சிறுவர்மணி

இடனறிதல்

28th Nov 2020 04:25 PM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  50   -   பாடல்  7


""அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை 
எண்ணி இடத்தாற் செயின்.


- திருக்குறள்

எதிலும் குறைகள் இல்லாமல் 
எல்லா நிலையிலும் உற்றுணர்ந்து 
வழி வகைகளைக் கற்றுணர்ந்து 
செயலில் இறங்க வேண்டுமே

அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 
பொருத்தம் பார்த்து வினை செய்தால் 
அஞ்சா நெஞ்சம் போதுமே 
வேறு துணை ஏதும் வேண்டாமே

ADVERTISEMENT


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT