யாரிடத்தில் இரக்கம் அதிகமாக இருக்கிறதோ அவர்களிடம் கடவுள் இருக்கிறார்.
தனக்காக அல்லாமல் உலகம் எல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
கனவிலும் வஞ்சனை நினையாதவர்களுக்குத்தான் இறைவனது இன்னருள் கிட்டும்.
ADVERTISEMENT
கடுமையாக நோன்பு இருப்பதைக் காட்டிலும் "உயிர்களைக் கொல்லா விரதம்' இருப்பது சிறந்தது.
எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்தலே கடவுள் பக்தி.
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.
அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை.
நல்ல எண்ணங்களே நடத்தையைப் பாதுகாக்கும்.
எல்லா உயிர்களும் நமக்கு உறவே! அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.