சிறுவர்மணி

விடுகதைகள்

21st Nov 2020 06:00 AM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

1. ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன் தம்பிகள் நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை...
2. எல்லோருக்கும கால் தடம் உண்டு, இந்தக் குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது...
3. அணில் பிள்ளை ஏறாத அழகுக் கொம்பு...
4. அவிழ்த்து விட்டால் அழிப்பவனை அடக்கி வச்சிருக்கு...
5. கையுமில்லை காலுமில்லை ஆனாலும் நகர்ந்து நகர்ந்து செல்கிறான்...
6. கடலில் இருந்தவன்... கரையில் பிரிந்தவன்... கடையில் கிடக்கிறான்...
7. அண்ணன் தம்பி 12 பேரில் ஒருவன் மட்டும் குறைப் பிரசவம்...
8. வெண்மையாக இருப்பேன் பால் அல்ல... விசேஷ நாட்களில் வீடுகளைப் பளிச்சிட வைப்பேன்... நான் யார்?

விடைகள்


1. கடிகாரம்  
2. எறும்பு
3. மாட்டுக் கொம்பு  
4. தீபம்
5.  நிலா  
6.  உப்பு  
7.  பிப்ரவரி மாதம்
8.  சுண்ணாம்பு

ADVERTISEMENT

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT