சிறுவர்மணி

பொன்மொழிகள்

27th Jun 2020 10:00 AM | முத்து பாஸ்கரன், முத்தியால்பேட்டை.

ADVERTISEMENT

 

அநீதி இழைப்பவன், அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகமாகத் துயரம் அனுபவிப்பான். 
 -  பிளாட்டோ

பிறரைச சீர்திருத்தும் கடமையைவிட தன்னைச் சீர்திருத்துவதுவே முதற்கடமை. -  பெர்னார்ட் ஷா


அன்பான செயல்களால் இதயங்கள் வசப்படும்.  
- பர்லே

ADVERTISEMENT


கண்பார்வை அற்றவன் குருடன் அல்லன்! தன் குற்றம், குறைகளை உணராதிருப்பவனே குருடன்.  
-  மகாத்மா காந்தி


உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.  
- நபிகள்


முள்ளைத் திருப்பிக் கடிகாரத்தைச் சரிப்படுத்தலாம்! ஆனால் மனிதர்களின் மனதை அப்படி மாற்ற முடியாது.
-  யாரோ


குழந்தைகளுக்கு நம்புவதற்கு கற்றுக் கொடுப்பதைவிட, சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்.  
-  இங்கர்சால்


கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.  
-  வியாசர்


அரசன், ஆசிரியன், நண்பன், புத்திசாலி ஆகியவர்களோடு தர்க்கம் வேண்டாம்.  
-  சாணக்கிய நீதி


அகந்தை முன்னே செல்லும். அவமானம் பின் தொடரும்.  
-  சாலமன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT