சிறுவர்மணி

கடி

20th Jun 2020 04:55 PM

ADVERTISEMENT


ஏண்டா காபியை குடிக்காம பார்த்துக்கிட்டே இருக்கே?"
வெளியிலே "காபி பார்' னு எழுதியிருக்கே!"

ச.ஷகிலா பானு, 
 தூத்துக்குடி--628001. 

 


""டேய் பாயசத்தைக் கொட்டிடாதே!....''
""நான் ஏன் பாயசத்தைக் கொட்டணும்?..... நல்லாத்தானே இருக்கு!''
""உப்பில்லாப் பண்டம்னு குப்பையிலேன்னு பாட்டி சொன்னாங்களே அதனாலேதான்!'' 

ADVERTISEMENT


நா.வினோத் குமார்,
பாராஞ்சி.

 

""என்னடா இது படம் ஒரே கறுப்பா புகை மாதிரி இருக்கு?''
""அதுதான் நான் எடுத்த புகைப்படம்!''

ஆர்.சுப்பு, 
திருத்தங்கள்.

 

""உன் பேரு என்ன?''
""கதவுன்னு வெச்சுக்கோயேன்!....''
""ஏண்டா அப்படிச் சொல்றே?
""எங்கப்பா அடிக்கடி என்னை சாத்துவாருடா!''

நஜ்முதீன், 
காயல்பட்டினம்.

 

""அது என்னடா அது பாட்டில்லே?''
""சானிடைசர்!''
""சரி,.... இது என்ன வாளியிலே பச்சையாய்க் கரைச்சு வெச்சிருக்கீங்க?''
""...."சாணி' டைசர்!''


கோ.வினோத், 
திருநெல்வேலி - 627011.

 

""அக்கா உனக்கு தண்ணி வேணுமா?''
""ஆமா வேணும்' 
""அப்ப நீ போய் குடிச்சிட்டு எனக்கும் எடுத்துட்டு வா!....

ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்-608001 

ADVERTISEMENT
ADVERTISEMENT