சிறுவர்மணி

கடி

13th Jun 2020 08:10 PM

ADVERTISEMENT

""எதுக்கு பேப்பர்லே "ஆ' ன்னு எழுதிக்கிட்டுப் போறே?''
""டாக்டரைப் பார்க்கப் போறேன்!.... அவரு "ஆ' காட்டச் சொல்லுவாராமே!...''

நா.வினோத்குமார், 
பாராஞ்சி, ராணிப்பேட்டை - 632510.
""அவன் ரெண்டு மணி நேரம் நின்னா உன் கால் ஏன் வலிக்குது?''
""அதை நான் நின்னு வேடிக்கை பார்த்தேன்!''

என்.பர்வதவர்த்தினி,
பம்மல், சென்னை - 600075.

ADVERTISEMENT
""ஒவ்வொரு முறை சோப்பு போட்டு கழுவும்போதும் டிஷ்யூம், டிஷ்யூம்னு சவுண்டு கொடுக்கறயே ஏண்டா?''
""கரோனா கிருமிகளை எதிர்த்து சண்டை போடறேன்!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

 


 ""நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழா சொல்லு!'' 
""உடம்பு சரியில்லை சார்!.... என்னாலே தலைகீழா நிக்க முடியாது!''

சு.பிரேம் ராகுல், 
நாகர்கோவில் - 629003.
""எதுக்கு யானை மேலே செல்ஃப் சர்வீஸ்னு எழுதி வெச்சிருக்கீங்க?''
""யானைக்கு உடம்பு முடியலே..... நீங்களே துதிக்கையை எடுத்து தலையிலே வெச்சுக்குங்க!''

நெ.இராமன், 
சென்னை - 600074.

 

""சார்!.... என் தலையிலே எறும்பு ஏறுது பாருங்க!...''
""அதை ஏன் நான்  பார்க்கணும்?''
""நீங்கதானே சார், என் தலையில் எதுவும் ஏறாதுன்னு சொன்னீங்க!''

தி.மதிராஜா, 
சின்னபுங்கனேரி - 608301.

ADVERTISEMENT
ADVERTISEMENT