சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா (29/02/2020)

29th Feb 2020 12:00 PM

ADVERTISEMENT

கேள்வி:
 எங்க வீட்டுக்குப் பக்கத்திóல் உள்ள குட்டையில் கொக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். உலகில் எத்ததனை வகையான கொக்குகள் உள்ளன?
 பதில்: உலகின் 5 கண்டங்களிலும் சேர்த்து ஏறக்குறைய 15 வகை கொக்குகள் உள்ளன. அவற்றின் வயது, அளவு வசிப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து இனங்களில் வேறுபாடுகள் உள்ளன. டிமாய்சல் என்ற இன வகைக் கொக்குகளின் மொத்த உயரமே 90 செண்டிமீட்டர்கள்தான். இவைதான் உலகின் மிகச் சிறிய கொக்குகள். ஸாரஸ் என்ற இனக் கொக்குகள்தான் உலகிலேயே அளவில் மிகவும் பெரியவை. இவை 175 செ.மீ. உயரம் இருக்கும்.
 எல்லா வகைக் கொக்குகளுமே ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில்தான் வசிக்கும். வெள்ளை நிறம் தவிர இளநீல வண்ணத்திலும் கொக்குகள் இருக்கும். சிலவற்றுக்குக் கழுத்துப் பகுதியில் மட்டும் கருப்பு நிறம் காணப்படும்.
 எப்படிப் பார்த்தாலும் சைபீரியாவில் வசிக்கும் கொக்குகள்தான் உலகிலேயே மிகவும் அழகானவை.
 - ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 மிகவும் பளுவான பொருட்களைத் தூக்குவதற்கு கிரேன்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிரேன்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது. யார் இந்தக் கிரேனைக் கண்டுபிடித்தது?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT