சிறுவர்மணி

 மக்கட்பேறு!

25th Feb 2020 11:08 AM

ADVERTISEMENT

குறள் பாட்டு
 அறத்துப்பால் - அதிகாரம் 7 - பாடல் 7
 தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
 முந்தி யிருப்பச் செயல்.
                                                                                                    - திருக்குறள்
 பிள்ளைக்குத் தந்தை செய்யும் நன்மை
 பெரியோர் இருக்கும் அவையிலே
 முதலிடத்தில் இருப்பதற்கு
 அறிவைப் புகட்ட வேண்டுமே
 
 கண்களைப்போல் பிள்ளைகளைக்
 கருத்தாய் வளர்க்க வேண்டுமே
 பிள்ளைகட்கு நல்லறிவு
 பெற்றோர் தர வேண்டுமே.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT