பசும்புல்லை மேய்ந்திடும் நன்றாய் "ஆடு!'' - தம்பி
பள்ளி விழா மேடையில் அழகாய் "ஆடு!''
வீட்டுக் கூரைக்கு வேய்வார் "ஓடு!'' தம்பி
விரைவாய் ஓட்டப் போட்டியில் "ஓடு!''
பறவைகள் மரத்தில் அமைக்கும் ""கூடு!'' - தம்பி
பாசமாய் நண்பருடன் என்றும் ""கூடு!''
அறத்தில் சிறந்தது நம் தமிழ் ""நாடு!'' - ஐயம்
தீர்ந்திட என்றும் பெரியோரை ""நாடு!''
வெயிலில் அலைந்திட்டால் உடல் பெறும் ""சூடு!'' - தம்பி
வெற்றிக்கு மாலையை அணிவிப்பார்!....""சூடு!''
உயர்ந்திட வாழ்க்கையில் படுவார்கள் ""பாடு!''
உழைப்பைப் போற்றி நீ ஒரு பாடல் ""பாடு!''
மழை வந்தால் தண்ணீரால் பெருகி ஓடும் "ஆறு!'' - மனம்
துன்பத்தாலே வருத்தமுற்றால் சற்றே நீயும் "ஆறு!''
பழங்களைக் குவியலாக வைத்திட்டால் அது ""கூறு!''
அவை இனித்தவுடன் பாராட்டை நீ வாய் விட்டுக் ""கூறு!''
கெங்கை பாலதா