சிறுவர்மணி

பாரதியாரின் பொன்மொழிகள்!

25th Feb 2020 11:10 AM

ADVERTISEMENT

அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும்.
• நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
• யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றும் உண்மைகளை மறைக்கக் கூடாது.
• துணிவே தாய். அதிலிருந்துதான் எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.
• தர்மத்தாலும், கருணையினாலும் எய்தப்படும் வெற்றியே நிலை பெற்று நிற்கும்.
• அவநம்பிக்கையே வெற்றிக்கு எதிரியாகும்.
• அறியாமையே எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
• கவலைப்படாதே! கவலை மனிதனை அரித்தே கொன்றுவிடும்!
• நிறையப் பேசுவதைக் காட்டிலும், குறைந்த அளவு காரியங்களைச் செய்வது மேலானது!
-நெ. இராமன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT