சிறுவர்மணி

தாமதம் வேண்டாம்!

25th Feb 2020 11:51 AM

ADVERTISEMENT

ஆதவன் உதிக்கத் தாமதம் ஆனால்
 இரவு எங்ஙனம் விலகிடும்!
 இறைக்கை விரியத் தாமதம் ஆனால்
 பறவை எப்படிப் பறந்திடும்?
 
 காற்று சற்றே தாம தித்தால்
 மூச்சு விடுவது மிகச் சிரமம்!
 இமைகள் இமைக்கத் தாம தித்தால்
 விழிகளில் தூசு விழுந்திடும்!
 
 ஊற்று சுரக்கத் தாமதம் ஆனால்
 வறட்சி நாவை வருத்திடும்!
 தண்ணீர் விடத் தாமதம் செய்தால்
 தாவரங்கள் வாடிடும்!
 
 பள்ளிக்குத் தாமத மாகச் சென்றால்
 வாயில் கதவினை மூடுவார்!
 பாடம் படிக்கத் தாமதம் செய்தால்
 பாடச் சுமைகள் கூடிடும்!
 
 தம்பீ, தங்காய்! கல்வியில், கடமையில்
 தாமதம் வேண்டாம் என்றும்!
 நேரத்தோடு காரியம் செய்து
 நலங்களைப் பெற் றிடுவீரே!
 அழகு இராமானுஜம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT