சிறுவர்மணி

புதிர்

15th Feb 2020 04:07 PM

ADVERTISEMENT


இது ஒரு உலகப் புகழ்பெற்ற புதிர். கேள்விக்குறி இடப்பட்டுள்ள இடத்தில் என்ன எண் வர வேண்டும்? ரொம்பவும் மூளையைப் போட்டுக் குழப்பாமல் கண்டு பிடிக்க வேண்டிய புதிர் இது...

புதிருக்கு விடை:

 4 அதாவது 234 என்றுதான் உலகின் பெரும்பாலானோர் இந்தப் 
புதிருக்கு விடை சொல்லியிருக்கிறார்கள். 5 அதாவது 235 என்று சொன்னவர்கள் மிகவும் சொற்பம். ரொம்ப நேரம் யோசித்து விடை கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு செல்லக்குட்டு. சட்டென்று கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு குட்டி லட்டு..!

ADVERTISEMENT

பொருத்துக...
உலப் புகழ்பெற்றவர்களும் அவர்களது நாடுகளும் இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்துங்கள் பார்க்க லாம்...
1. தாமஸ் ஆல்வா எடிசன்    -    பிரேசில்
2. சே  குவேரா        -    கியூபா
3. டான் பிராட்மேன்    -    வங்கதேசம்
4. மோசாட்        -    ஆஸ்திரேலியா
5. முஜிபுர் ரஹ்மான்    -    ஆஸ்திரியா
6. பீலே                          -    கனடா
7. கிரஹாம் பெல்        -    அமெரிக்கா
8. ஃபிடல் காஸ்ட்ரோ    -    அர்ஜென்டினா

விடை
1. அமெரிக்கா
2. அர்ஜென்டினா
3. ஆஸ்திரேலியா
4.  ஆஸ்திரியா
5.  வங்கதேசம்
6. பிரேசில்
7. கனடா
8. கியூபா

விடுகதைகள்
1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். இது என்ன?
2.  பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். இவன் யார்?
3.  நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி யில்லை இவர் யார்? 
4. உடம்பெல்லாம் சிவப்பு, இவருடைய குடுமி பச்சை   யார் இவர்?
5. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். இவன் யார்?
6. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. இது என்ன?
7.   கண்ணுக்குத் தெரியும் செடி வளருவது.  காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
8. பட்டுப்பை நிறைய பவுன் காசுகள்.  இது என்ன?

விடைகள்
1.  மஞ்சள் செடி 
2. தேன் 
3. சிலந்தி
4. தக்காளி
5. நுங்கு
6. நாணயம்
7.  வேர்க்கடலை
8. மிளகாய் வத்தல்
-ரொசிட்டா

இதிலுள்ள  6 துண்டுப்படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும். அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் வரைந்து பார்க்கலாம் அல்லது அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

ஆறு துண்டுகளை  ஒழுங்காக ஒட்டினால் கிடைக்கும் படம்

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால்  புகழ்பெற்ற வெங்கடேசப் பெருமாள் ஆலயம் இருக்கும் ஊரின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1.  அதிருசியான பலகாரம் ஒன்றின் பெயர்...
2.  அறுபடை வீடுகளுள் ஒன்று....
3.  அம்மா பொறிப்பது, சுட்டிகளுக்கு மிகவும் பிடித் தது...
4. பழங்களின் அரசன், மாமரத்துவாசன்...
5.  இதற்கு வைத்தியம் குற்றாலம்தான்...

விடை: 
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அதிரசம், 
2. திருத்தணி, 
3. அப்பளம்,  
4. மாம்பழம், 
5. பைத்தியம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல் :  திருப்பதி
- ரொசிட்டா

ADVERTISEMENT
ADVERTISEMENT