சிறுவர்மணி

குறள் பாட்டு: வாழ்க்கைத் துணை நலம்

15th Feb 2020 05:08 PM

ADVERTISEMENT


அறத்துப்பால்   =  அதிகாரம்  6  -  பாடல் 7

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை.

-திருக்குறள்

சிறையில் அடைத்து வைப்பது போல் 
சிறகில் அணைத்துக் காப்பது போல் 
பெண்களை வெளியில் விடாமல் 
வீட்டில் வைப்பது பயனல்ல

பெண்கள் தங்கள் தன்மையை 
நெஞ்சில் நிறைத்துப் போற்றுவர்
அந்தத் தன்மை அரியதே
அதன் பெருமை பெரியதே.

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT