சிறுவர்மணி

திருவிழா!

1st Feb 2020 09:23 PM | - ரமண ராஜசேகர்

ADVERTISEMENT

மாரியம்மன் கோயிலிலே திருவிழா - அங்கே 
முளைப்பாரி ஊர்வலமும் ஒரு விழா!
கோரிக்கையை மாரியிடம் கூறலாம்! - நம் 
குலம் வாழ அருள்தரவே கோரலாம்!

பக்தரெல்லாம் ஆடிப்பாடி வருகிறார்! - தலையில் 
பால்குடமும் தேன்குடமும் சுமக்கிறார்!
சக்தியிடம் வேண்டுதலை வைப்போமே - நம் 
சங்கடங்கள் தீர்த்தருளத் துதிப்போமே!

கோயிலிலே வழிபாடும் நடக்குது! - அங்கே 
குடம்குடமா பால் வழிந்து கொட்டுது!
தேவியவள் சாந்தமாகி அருள்கிறாள்! - கண்ட 
தரிசனத்தால் மக்களெல்லாம் மகிழ்கிறார்!

ஆண்டு தோறும் வருகுது பார் குதூகலம்! - மக்கள் 
ஆடிப்பாடி மகிழ்ச்சியிலே கும்மாளம்!
வேண்டும் வரம் தருபவள்தான் மாரியம்மா! - நம் 
வேதனைகள் தீர்த்திடுவாள் முத்து மாரியம்மா!

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT