ஓடும் நீரில் என் கப்பல்
ஒய்யாரமாய்ப் போகிறது!
ஆடும் அப்படி இப்படியாய்
ஆயினும் கவிழ்ந்து மூழ்காது!
காகிதக் கப்பல் என்றாலும்
கம்பீரமாகப் பயணிக்கும்!
வெயிலானாலும் மழையானாலும்
வேகமாகப் பயணிக்கும்!
அமைதியை நாடும் கப்பலிது!
ஆயுதம் தாங்காக் கப்பலிது!
சுமைகள் ஏற்றக்கூடாது!
சும்மா இருந்தா மூழ்காது!
மாலுமி இன்றிப் பயணிக்கும்!
மனதில் இன்பம் ஊற்றெடுக்கும்!
கண்ணில் இருந்து தப்பாமல்
கண்ணியமாகப் பயணிக்கும்!
ADVERTISEMENT
கல்லோ குச்சி கம்பிகளோ
கப்பலில் இட்டா தாங்காது!
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்
கப்பலைக் காண வாருங்கள்!