சிறுவர்மணி

அரங்கம்: பாம்பும் எறும்பும் சொன்ன (அறிவியல்) உண்மை!

1st Feb 2020 10:10 PM | இடைமருதூர் கி.மஞ்சுளா:

ADVERTISEMENT

 

காட்சி -1
இடம்: அம்மன் கோயில்
பாத்திரங்கள்: பூனைக் குட்டி, எறும்பு, பாம்பு.

(வெள்ளிக்கிழமை. கோயிலின் உள்பிராகாரத்தில் இருந்த புற்றுக்கு அருகில் பூனைக் குட்டி ஒன்று வருத்தமாக உட்கார்ந்திருந்தது. அதை எறும்பு ஒன்று பார்த்தது)

எறும்பு:  நீ ஏன்  இவ்வளவு வருத்தமாக இருக்கிறாய்?

ADVERTISEMENT

பூனைக் குட்டி: அதை ஏன் கேட்கிறாய்... பசி!... எனக்குத் தரவேண்டிய பாலை என் எஜமானியம்மா இன்று இந்தப் புற்றுக்கு ஊற்றிவிட்டார். இந்தப் பாம்புகளால் நான் இன்று பட்டினி.  இன்று மட்டுமல்ல... ஆடி வெள்ளி, செவ்வாய் என்று வந்துவிட்டால் போதும் நான் முழு பட்டினிதான். பாலை புற்றுக்கு ஊற்றிவிட்டு எனக்குப் பிடிக்காத தயிர் சாதம் போடுகிறார் என் 
எஜமானி. என்ன செய்வது? 

எறும்பு: அடப் பாவமே...ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று புரியவேயில்லையே?  மனிதர்களுக்கு சில அறிவியல் உண்மைகள் தெரிவதே இல்லை...!

பூனைக்குட்டி: என்ன சொல்கிறாய் நீ? என்ன உண்மை? 

(அப்போது புற்றிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து வெளிவந்தது ஒரு பாம்பு) 

பாம்பு: அதை நான் சொல்கிறேன். இது பாம்புப் புற்று என்று நினைத்து இந்த மக்கள் எங்களுக்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளிலும், ஆடிமாதத்திலும் பால் ஊற்றுகிறார்கள். ஆனால் எங்களுக்குப் புற்றும் கட்டத்தெரியாது, நாங்கள் பாலும் குடிப்பதில்லை.

பூனைக்குட்டி: அப்படியா....? அட! பின்னே ஏன் மக்கள் பாலை ஊற்றி வீணாக்குகிறார்கள்?

பாம்பு: அதை நாளை சொல்கிறேன்... உன் எஜமானியம்மா வராங்க... நீ கிளம்பு. நாளை அவசியம் வந்துவிடு.... 

(பாம்பு தன் தலையை புற்றுக்குள் நுழைத்துக் கொண்டது)

பூனைக்குட்டி: அட!... எறும்பு அண்ணாவே... பாம்பு கூறுவது உண்மையா? வியப்பாக இருக்கிறதே?

எறும்பு:  உண்மைதான். இது பாம்பு புற்றே கிடையாது. பாம்புக்குப் புற்றும் கட்டத் தெரியாது...  இதில் எங்கள் இனமும் (எறும்பு) சம்பந்தப்பட்டிருப்பதால் நானும் சில உண்மைகளை உனக்குக் கூற வேண்டியிருக்கிறது. நாளை நாம் அவசியம் சந்திப்போம்... மறக்காமல் வந்துவிடு!

காட்சி -2
இடம்: அம்மன் கோயில்
பாத்திரங்கள்: பூனை, எறும்பு, பாம்பு, கரையான்.

(புற்று அருகே வந்த பூனைக்குட்டி பல முறை மியாவ்...மியாவ்... என்று குரல் கொடுத்த பிறகு பாம்பு மெல்ல தன் தலையை நீட்டி வெளியே வந்தது. கூடவே எறும்பு தன் இனத்தார் போல இருந்த வேறு சிலரையும் உடன் கூட்டிக்கொண்டு வந்தது.)

பூனைக்குட்டி: என்ன உண்மை?...சொல்லுங்கள்...கேட்க ஆவலாக இருக்கிறேன். 
பாம்பு: பொறு, அவசரப்படாதே... நானும் எறும்பும் மட்டுமல்ல... இந்தப் புற்றுக்குச் சொந்தக்காரர்களான இவர்களும் கூறுவார்கள்.

பூனைக்குட்டி: யார் இவர்கள்? 

எறும்பு: அதை நான் சொல்கிறேன். மண் புற்றுகள் இருப்பதை மக்கள் எங்காவது பார்த்தால் உடனே அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாகவும் நினைக்கிறார்கள். உடனே, அங்கே பாலை ஊற்றி வழிபடத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. 

பூனைக்குட்டி: உண்மையாகவா...? பிறகு எதற்காகப் பாம்புகள் புற்றுக்குள் இருந்து வெளியே வருகின்றன? 

பாம்பு:  புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை.  (எறும்புடன் வந்த சிலரைக் காண்பித்து)  இவர்கள்தான் அதற்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையவர்கள். கரையான் கூட்டத்தில் 500 முதல் 5,00,000 வரை கரையான்கள் இருக்கும். தாய்க் கரையான் கொழு கொழுவென்று பெரிதாக இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. அதனை சாப்பிடுவதற்காகவே நாங்கள் புற்றுக்குள் சென்று வருகிறோம். கரையான் புற்றைத்தான் பாம்புப்புற்று என்று தவறாக நினைத்து இந்த மக்கள் அதற்குள் பாலையும் ஊற்றி பூஜையும் செய்கிறார்கள். அறிவியல் உண்மை தெரியாத இந்த மக்களின் அறியாமையைப் பார்த்தாயா...?

கரையான்: அதுமட்டுமல்ல,  பாம்புகளின் நாக்குகள் பிளவுபட்டிருப்பதால், அவற்றால் பாலை உறிஞ்சியோ,  நக்கியோ குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கக் கூடிய இயல்புடையது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அது குடிப்பதில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது; அதற்குக் காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்து கொள்ளும்.  மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதுமில்லை... பாம்பாட்டியின் உடலசைவுக்கு ஏற்றபடித்தான் ஆடுகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழும்  மனிதர்களுக்கு இந்த அறிவியல் உண்மைகள் தெரியவில்லை.... 

பூனைக்குட்டி: அப்படியா...? வியப்பாக இருக்கிறதே....

எறும்பு: அதற்குள் வாயைப் பிளக்காதே... மேலும் சொல்கிறேன் கேள்... இந்த நேரத்தில் ஒரு பழமொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன். கிராமங்களில், "கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல' என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா.... கரையான்தான் புற்றைக் கட்டுகிறது, பாம்பு அல்ல என்பது...

பாம்பு: மீதியை நான் சொல்கிறேன்... ஒரு கரையான் கூட்டத்தில் ராணிக் கரையான், மன்னர் கரையான், ராணுவ வீரர்கள் (சோல்ஜர்ஸ்), பணிக்கரையான்கள் (வொர்க்கர்ஸ்) என நான்கு வகை  இருக்கும். ராணிக் கரையான் இடும் முட்டைகளிலிருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். அவை புற்றைவிட்டு வெளியேறி புதிய புற்றுகளை உருவாக்கும். அவற்றின் நில வசிப்பிடத்தினைத்தான் "புற்று' என்கிறார்கள்.

பூனைக்குட்டி: உண்மையாகவா? 

எறும்பு: ஆமாம். இந்தக் கரையான்கள் அழிந்து போனவுடன் உடனே அதில் பாம்புகள் வந்து குடியேறும். கறையான்களை "வெள்ளை எறும்புகள்' என்று எங்கள் இனத்தோடு இணைத்துக் கூறுவார்கள். கரையான்கள் எங்களைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எங்கள் இனத்தவை அல்ல. நாங்கள் ஏஹ்ம்ங்ய்ர்ல்ற்ங்ழ்ஹ என்ற வகையைச் சேர்ந்தவர்கள். கரையான்கள் ஐள்ர்ல்ற்ங்ழ்ஹ என்ற வகையைச் சேர்ந்தவை. ஐள்ர் என்றால், "ஒரே மாதிரி' என்று பொருள். டற்ங்ழ்ஹ என்றால், "இறக்கை' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால்தான், இந்த வகைப்பாட்டில் பெயர். ராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். ராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இந்தக் கரையான்களில்  உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், 2,750 சிற்றினங்களும் உள்ளன. கரையான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு இருக்கிறது. மண்ணியல், நீரியல் போன்றவற்றின் மாற்றங்களைச் சுட்டிக் காட்டுபவையாகப் புற்றுகளை இவை மாற்றியுள்ளன. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியான தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எல்லாம் புற்றுகள் மூலமே அறிய முடிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பாம்பு: மேலும் உண்மைகளைச் சொல்கிறேன்.... புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கணிக்கலாம் என்ற புதிய தகவலையும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். "கார்னகி' நிறுவனத்தின் உலக சுற்றுச் சூழலியல் துறை ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை ஆப்பிரிக்காவில் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது முதலிய நவீன உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகளை ஆய்வு செய்துள்ளனர். புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவாக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், ஆண்டுதோறும் பெய்யும் மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

பூனைக்குட்டி : உண்மையாகவா? 

பாம்பு : ஆமாம், அது மட்டுமா? சில கரையான் புற்றுகளில், பல மில்லியன் கரையான்கள் இருக்குமாம். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியவை ஒருவித மிதவை உந்து விசைகளை (ஆன்ர்ஹ்ஹய்ற் ச்ர்ழ்ஸ்ரீங்ள்) உள்ளிழுக்கும். எனவே, புற்றின் உள்ளிருக்கும் காற்று இங்ய்ற்ழ்ஹப் ஸ்ரீட்ண்ம்ய்ங்ஹ் மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள் காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன்-டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன நன்ழ்ச்ஹஸ்ரீங் ஸ்ரீர்ய்க்ன்ண்ற்ள்  மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்து கொள்ளும். எனவே, புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள் நன்ழ்ச்ஹஸ்ரீங் ஸ்ரீர்ய்க்ன்ண்ற்ள், இங்ய்ற்ழ்ஹப் ஸ்ரீட்ண்ம்ய்ங்ஹ் மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே, புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், நாங்கள் புற்றுக்குள் வந்து தங்கிவிடுகிறோம். இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப் பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா?

பூனைக்குட்டி: உண்மையாகவா...? நான் வியப்பின் உச்சிக்கே போய்விட்டேன்...
கரையான்:  ஆமாம் பூனைக்குட்டியே... எங்களுக்குக் கண்கள் கிடையாது. எறும்பும் பாம்பும் எங்களைப் பற்றி கூறியவை அனைத்தும் உண்மை. எங்களைவிட அவர்கள் எங்களைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதையெல்லாம் நீ உன் எஜமானி அம்மாவுக்குச் சொல்லி, கூகுளில் சென்று எங்களைப் பற்றி தேடிப் படிக்கச் சொல்லு. அதில் மேலும் நிறைய அரிய தகவல்கள் உள்ளன.  

பாம்பு: நீ சொல்வதும் சரிதான்... இன்றைக்குத்தான் மக்கள் எல்லோர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறதே... இருந்த இடத்தில் இருந்தபடியே அதில் படித்துத் தெரிந்து கொள்ளலாமே.... இதனால் அவர்கள் அறியாமையும் விலகும்... எங்கள் தலையிலும் பாலை ஊற்றமாட்டார்கள்... கரையான்களின் புற்றும் அழியாது.... நீயும் இனி  பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை.... 

பூனைக்குட்டி: மிக்க நன்றி நண்பர்களே... இத்தனை நாளும் எனக்குக் கிடைக்க வேண்டிய பாலையெல்லாம் பாம்புதான் குடிக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டேன். மன்னித்துவிடு பாம்பண்ணா...  இத்தகைய அரிய அறிவியல் உண்மைகளை நான் இப்போதே சென்று என் எஜமானிக்கு மட்டுமல்ல.... இந்த உலகுக்கே தெரியப்படுத்துகிறேன். 
    
(மகிழ்ச்சியாகக் குதித்துக் குதித்துப் பூனை ஓடிச் சென்று மறைந்தது)

-திரை- 

ADVERTISEMENT
ADVERTISEMENT