சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

1st Feb 2020 10:18 PM | - ரொசிட்டா

ADVERTISEMENT

 

கேள்வி: புலி ஏன், எப்பொழுதும் பின்பக்கமாகவே தாக்கு கிறது?

பதில்: தனது இரையைப் பிடிக்க, பஞ்ச தந்திரம் மட்டுமல்ல பலவிதத் தந்திரங்களைப் புலி கையாளும். எளிய விலங்குகளைக் கண்டால் புலியின் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அந்தச் சமயத்தில் தனது வலிய உடலை புல், புதர்களில் சாதுர்யமாக மறைத்துக் கொண்டு திடீர் என்று தாக்குதல் நடத்தும்.

சாம்பார் மான் என்று ஒரு வகை இருக்கிறது. அந்த மானைக் கண்டுவிட்டால், சற்றே தூரத்தில் ஒளிந்து கொண்டு அந்த மானைப் போலவே மிமிக்ரி செய்து கத்தும். இதைக் கேட்ட அந்த மான் தனது குரல் போலவே இருக்கிறது என்று நினைத்து அருகில் வரும். அப்போது, புலி தனது தாக்குதலை நடத்தும்.

ADVERTISEMENT

ஆனால், விலங்குகள் கூட்டமாக வந்தால் இத்தகையை தந்திரங்கள் எல்லாம் பலிக்காது.  ஆகவே கூட்டம் நகரும் போது கடைசியாகச் செல்லும் விலங்கை மட்டுமே குறி வைக்கும் புலி. அந்தச் சமயத்தில் மற்ற விலங்குகளின் கவனத்தைக் கவராமல் இருக்கவும் நேரத்தை வீணாக்கமல் இருக்கவும் அந்த விலங்கின் பின்பக்கமாகத் தாக்கும்.

இப்படிப் பின்பக்கமாகத் தாக்குவதற்கு மற்றொரு முக்கிய காரணம், அந்த விலங்கின் தண்டுவடத்தை நோக்கிப் புலி பாய்வதால் தண்டுவடம் பாதிக்கப்பட்டு அது செயலிழக்கும்நிலை ஏற்படுகிறது. பிறகு என்ன புலியின் பசி ஆறிவிடும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT