சிறுவர்மணி

கருவூலம்: ட்ரிஸ்டன் டா  குன்ஹா!

5th Dec 2020 06:38 PM | - சுமன்

ADVERTISEMENT

 

மிக அழகான தீவு இது! ஒரு எரிமலையுடன் கூடியது! எனினும் பாறைகளும் காடுகளும் கொண்ட கடற்கரை சூழ்ந்த தீவு. அமெரிக்காவைச் சேர்ந்த "எட்கர் ஆலன்போ' தனது நாவலில் இந்தத் தீவைப் பற்றி மிக அற்புதமாக விவரித்திருக்கிறார். புகழ் பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் "ஹெர்வ் பேஸின்' தனது நாவலில் இந்தத் தீவை வர்ணித்திருக்கிறார். விம் வெண்டர் எடுத்த "விங்ஸ் ஆஃப் டெஸைர்' என்ற படத்திலும் இந்தத் தீவின் அழகு இடம் பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த "ராய் கேம்பல்' என்ற புகழ் பெற்ற கவிஞர் இந்தத் தீவின் அழகில் மயங்கி தனது கவிதைகளில் வர்ணனை செய்துள்ளார். மேலும் பற்பல கவிஞர்களாலும், நாவலாசிரியர்களாலும் இந்தத் தீவின் அழகு வர்ணிக்கப்பட்டுள்ளது.

1506 - ஆம் வருடம். ஒரு போர்ச்சுகீசியக் கப்பல் நன்னம்பிக்கைப் பயணமாக அட்லாண்டிக் கடலில் பயணித்தது! அதன் கேப்டனாக இருந்தவர் ட்ரிஸ்டியோ டா குன்ஹா! அவர் கப்பலில் வந்தபோது தனது தொலை நோக்கியில் ஒரு தீவைப் பார்த்தார். அன்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. அந்தத் தீவை அவர் தன் பெயராலேயே அழைத்தார்!

ஆனால் அவர் அங்கு தங்கியிருக்கவில்லை.

ADVERTISEMENT

பிறகு 1650 - ஆம் ஆண்டில் இங்கு டச்சுக்காரர்கள் வந்து இறங்கினர். இந்தத் தீவின் அழகு அவர்களை வசீகரித்தது. எங்கு பார்த்தாலும் பறவையினங்கள்! பெங்குவின்கள்! பல்லாயிரக்கணக்கான நீர்வாழினங்கள். மலை! சொந்த நாட்டை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் வந்ததாலும், சரியான துறைமுகம் இல்லாததாலும், இங்கு குடியேறி வசிப்பதில் அதிகம் அக்கறை காட்டவில்லை.

1810 - இல் இங்கு அமெரிக்கர்கள் வந்திறங்கினர். அவர்கள் இங்கு தங்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். அமெரிக்காவிலிருந்து "ஜொனாத்தான் லம்பர்ட்' என்பவர் இங்கு சில ஆட்களுடன் குடியேறிப் பின் தன்னையே இந்தத் தீவின் அதிபராக அறிவித்துக்கொண்டார். பிறகு அவர் அந்தத் தீவிலேயே காணாமல் போனார். அதற்குப் பிறகு "தாமஸ் கர்ரி' என்பவர் அங்கு அதிபராக பதவியேற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். (அப்போது அந்தத் தீவில் மிகச் சிறிய அளவிலேயே மனிதர்கள் வசித்தனர்.

1814 ஆண்டில் பிரிட்டிஷார் ஒரு போர்க்கப்பலுடன் வந்து இந்தத் தீவைப் பிடித்தனர். பிறகு இங்கு சிலர் குடியேறினர். இன்று வரை இந்தத் தீவு பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ்தான் உள்ளது. பிரிட்டிஷ் பவுண்டுகள் பணமாக உள்ளது.

தெற்கு அட்லாண்டிக் கடலில் அர்ஜென்டினாவுக்கும் தென்னமெரிக்காவின் கேப்டவுனுக்கும் நடுவில் உள்ளது. சொல்லப்போனால் தென்னமெரிக்காவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் நடுவில் உள்ளது!

இந்தத் தீவு சுமார் 6,27,247 சதுர கி.மீ. கொண்டது! இது அர்ஜென்டினாவிலிருந்து சுமார் 4453 கி.மீ தூரத்திலும், "செயின்ட் ஹெலனா' என்ற தீவிலிருந்து சுமார் 2161 கி.மீ தூரத்திலும், தென்னமெரிக்காவின் கேப்டவுனிலிருந்து 2432 கி.மீ தூரத்திலும் உள்ளது.

இத்தீவில் 2018 - ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி சுமார் 260 பேர்களே வசிக்கின்றனராம்! சுமார் 80 குடும்பங்கள் உள்ளன.

1961 - ஆம் ஆண்டு இங்கிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு அதன் எரிமலைக் குழம்புகள் சிதறின. இங்கிருந்த மக்கள் பயந்து போய் தீவை விட்டு வெளியேறிவிட்டனர். பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் வந்து இங்கு குடியேறினர்.

விமான வசதிகள் ஏதும் இந்தத் தீவிற்குக் கிடையாது. விமான ஓடுபாதைகள் அமைக்க வாகான இடம் இங்கு இல்லாததே காரணம். கேப்டவுனிலிருந்து கப்பல் பிடித்து சுமார் 6 நாட்களில் இங்கு வந்து சேரலாம்.

பண்டிகைக் காலங்களில் பாடல்களும் நடனங்களும் பழைய மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, பேஸ் பால் போன்ற ஆட்டங்கள் இங்கு வாழும் மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகள்! ட்ரிஸ்டன் டைம்ஸ் என்ற பத்திரிகையும் இங்கு உண்டு. பிபிசி - 2, சானல் 4 - இல் இத்தீவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஒரு சிறு மருத்துவமனையும் உள்ளது. தற்போது உள்ள தொலைதொடர்பு வசதியினால் தொலை தூரத்திலுள்ள மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

சரி தீவின் அழகைச் சற்று பார்ப்போம்! அழகான சிறிய ஏரி! சில சிறிய நதிகள்! ஆங்காங்கே சில அருவிகள்! அடர்ந்த காட்டுப் பகுதி! பாறைகளும், பல் வேறு விதமான நெடிது உயர்ந்த மரங்களும் சூழ்ந்த மலைப்பிரதேசம்.

ராக் ஹாப்பர் பெங்குயின்கள் இங்கு காணப்படும் ஓர் அரிய பறவையினம். இவற்றின் தலையில் பக்கவாட்டில் தொங்கும் கேசங்கள் அனைவரையும் வசீகரிக்கும்! ஸ்டார்லிங் பறவைகள் இங்கு பிரசித்தம்! "த்ரஷ்' எனப்படும் பறவைகள் உட்பட பல நூறுவகையான பறவைகள் இத்தீவில் உள்ளன. கடற்கரையில் அழகாகப் பறக்கும் "ட்ரிஸ்டன்ஆல்பட்ராஸ்' பறவைகள் கொள்ளை அழகு கொண்டவை.

இங்கு கிடைக்கும் "ராக் லாப்ஸ்டர்' வகை இறால்கள் உலகப் பிரசித்தம்! கடலில் லட்சத்திற்கும் மேலான மீனினங்கள் உள்ளன.

"ஃப்ளையிங் ஸ்குவிட்' எனப்படும் பறக்கும் மீன்கள் இங்கு காணப்படுகின்றன! மீன் வளமும் இயற்கையழகும் கொண்ட அழகிய தீவு இது!

செயின்ட் மேரிஸ் சர்ச் மற்றும் செயின்ட் ஜோசஃப் சர்ச் என்று இரண்டு அழகிய கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. தீவில் தற்போது மின்வசதியும் உள்ளது. ஒரு சிறு தபால் அலுவலகமும் உள்ளது.

ஜேம்ஸ் க்ளாஸ் என்பவர் நான்காவது முறையாக இத்தீவின் அரசியல் தலைவராக உள்ளார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியை பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி என அறிவித்துள்ளது. இந்தக் கடற்பகுதியை "ப்ளூ பெல்ட்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.

மக்கள் தொகை அதிகமில்லாத ரம்மியமான மிகப் பாதுகாப்பான கடலும் கடற்கரையும் சேர்ந்த மிக அழகிய இடம்தான் இந்த ட்ரிஸ்டன் டா குன்ஹா! மனிதர்கள் அதிகம் நடமாடாத இடங்களில் இயற்கை வளங்கள் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன!

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT