சிறுவர்மணி

தெரிந்து தெளிதல்

5th Dec 2020 05:56 PM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  51   -   பாடல்  7

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் 
பேதைமை எல்லாம் தரும்.


- திருக்குறள்

கண்டு கேட்டு அறிந்திடக்
கருத்து கொள்ளாப் பேர்களை 
அன்பால் தேர்ந்து கொள்வது 
அறிவுடைமை ஆகாது

அறிந்து கொள்ள ஆசையுள்ளோர்
செயலில் தெளிவு இருக்குமே
தெளிவில்லாத பேர்களைத்
தேர்ந்தெடுப்பது தீமையே.

ADVERTISEMENT

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT