சிறுவர்மணி

கடி

5th Dec 2020 06:26 PM

ADVERTISEMENT

 


""எனக்கு மூணு நாளா சரியான இருமல்டா!''
""சும்மாவா இருந்தே?''
""இல்லியே,... நல்லா இருமிக்கிட்டுதான் இருந்தேன்!''


கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

 

ADVERTISEMENT

""தாத்தா, உனக்கு குங்ஃபூ தெரியுமா?''
""குங்குமப்பூதானே தெரியுமே, 
பாயசத்திலேயெல்லாம் போடுவாங்ளே!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன் - 627006.

 

""கொச்சி துறைமுகம் இந்தியாவிலே எங்கே இருக்கு சொல்லு பார்ப்போம்!''
""இதென்ன சார் பெரிய விஷயம்!.... 
கடலோரத்தில்தான் சார்!''

நெ.இராமன்,
பொழிச்சலூர், சென்னை - 600074.


""முட்டைகளெல்லாம் எப்படிடா இப்படி உடைஞ்சிருக்கு?
""முட்டை மேலே முட்டைக்கோலை வெச்சுட்டேண்டா!''


ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.""டாக்டர் செலவு மட்டும் தாத்தாவுக்கு ஆயிரம் ரூபா ஆகுது!''
""டாக்டரோட செலவை ஏன் உங்க தாத்தா செய்யறார்?''


கே.முத்தூஸ்,
தொண்டி.


""எங்க பெரிய அக்கா வேகமா சமைப்பாங்க!''
""சின்ன அக்கா?''
""வேகாம சமைப்பாங்க!''

மு.சுகுமாரன்,
மானாமதுரை.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT