புற்று நோய்க்கு அருமருந்து சிமரூபா மரம்! 

 நான் தான் சிமரூபா மரம் பேசுகிறேன். எனக்கு சொர்க விருட்சம், லஷ்மிதரு என்ற பெயர்களும் உண்டு. எனது அறிவியல் பெயர் சிமருபு கிளாக்கா என்பதாகும். நான் சிம்அரவ்பாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
புற்று நோய்க்கு அருமருந்து சிமரூபா மரம்! 

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் சிமரூபா மரம் பேசுகிறேன். எனக்கு சொர்க விருட்சம், லஷ்மிதரு என்ற பெயர்களும் உண்டு. எனது அறிவியல் பெயர் சிமருபு கிளாக்கா என்பதாகும். நான் சிம்அரவ்பாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் எல்லாவிதமான மண்களிலும் வளரும் தன்மையன். என்னை முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்டறிந்தாங்க. என் மரத்தின் விதை, வேர், கனி, கனியின் தோல் ஆங்கில மருத்துவத்திற்கும், இயற்கை மருத்துவத்திற்கும் பெரிதும் பயன்படுதுங்க.
 நான் மண்ணை வளப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக்கி மேம்படுத்துவேன். காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அதிக அளவும் பிராண வாயுவை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாத்து புவி வெப்பமயமாதலைக் குறைத்து, நல்ல காற்றை உங்களுக்கு அளிப்பேன்.
 என் விதைகள், மருந்து பொருள்கள், இயற்கை சோப்பு, மெழுகு சாயம், இயற்கை உரம், மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அது மட்டுமா, என் விதைகள் கால்நடைகளுக்கும் தீவினமாகிறது. என் மரத்தின் பட்டையைக் காய்ச்சிய நீரில் ஊற வைத்து பின் அந்நீரைக் குடித்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும். மேலும், என் மரப்பட்டையைக் கீறினால் வெளி வரும் மணமுள்ள பிசின் (மட்டிப் பால்) அகர்பத்திகள் செய்யவும், மருத்துவத்தின் வயிற்றுக் கடுப்பின் சிகிக்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 என் வேர் ஒரு பசுமையான விதானம் போலிருந்து மண் அரிப்பை தடுத்து, மண் நுண்ணுயிர்களைக் காக்கிறது. விதைகள் எடுக்கப்பட்ட கனிகளின் தோலினை காகித அட்டை தயாரிக்கப் பயன்படுத்தலாம். என் பழங்களின் சதைகளைப் பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தலாம்.
 என் மரத்தின் இலைகள் மற்றும் பட்டைகளுக்கு புற்று நோயைப் போக்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது என மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது, என் மரத்தில் உள்ள கோசினாய்ட்ஸ் என்ற அரிய வகை நுண் சத்து, தாது சத்து உள்ளது. இது தான் புற்று நோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. இரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும். என் இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் ஒரு வரப்பிரசாதம்.
 என் இலைகளை நன்கு அலசி சிறிது தண்ணீரிலிட்டு கொதித்து, அந்தத் தண்ணீரை எடுத்து தினமும் இரு வேளை பருகி வர விரையில் உடலில் உள்ள உபாதைகள் அனைத்து நீங்கியிருப்பதை நீங்கள் உணர முடியும். அமெரிக்காவில் என் விதைகளிலிருந்து செயற்கை நெய் தயாரித்து வீடுகளில் பயன்படுத்தறாங்க. என் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
 என் கட்டை மிகவும் லேசாக இருக்கும். இது பளு குறைவான பொருள்களை தாங்கும் பெட்டிகள் செய்யவும், வலை மிதவைகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. வாளின் பிடிகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. என் கட்டைகளை பூச்சிகள் அரிக்காது என்பதால் அழகு சாதனப் பெருட்கள் தாயாரிக்க பயன்படுத்தறாங்க. என்னை கேரளா மற்றும் கர்நாடக மக்கள் அதிகமாக வளர்த்து பயன்கள் பலவற்றை பெறுகிறார்கள்.
 தமிழகத்திலும் என்னை இப்போது வளர்த்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம்! என் மரத்தை உங்கள் வீட்டில் வளர்த்தால் அது ஆரோக்கிய காப்பீட்டுக்கு சமம். மரங்கள் இருக்குமிடம் ஆரோக்கியத்தின் பிறப்பிடம், அது மகிழ்ச்சி நிலைக்குமிடம். மரங்களை வளர்த்து, நோய்களை விரட்டி மகிழ்ச்சி காண்போம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம் !
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com