இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 
இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. அந்தப் பறவை தெய்வ பக்தி நிறைந்தது! மிக அழகானது! ஒரு தேவதை, அந்தப் பறவையைப் பார்த்து, " அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை நீராடுவதற்காக இந்த நீர்வீழ்ச்சிக்கு வரும்!'' என்று சொன்னது! 
"ஆம்!.... அதை நானும் அறிவேன்!....அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம்!'' என இரு தேவதைகளும் அனீலஸ் நீராடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தன!
அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த நேரத்தில், திடீரென நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தன!
ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது! எப்படிப்பட்ட தெய்வீகப் பறவை அது!... நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றது. உடனே மற்றொரு தேவதை, "அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும்!.... அந்த தெய்வ பக்தியுள்ள பறவை என்னால்தான் காப்பாற்றப் பட வேண்டும்!'' என்றாள். மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதைகளும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் நயாகரா அருவியின் அருகே இருந்த ஒரு மரத்திலிருந்து காய்ந்த சிறு கிளை நீரில் விழுந்தது. அது நீரில் மிதந்தது!.... அதில் அனீலஸ் பறவை ஏறிக் கரை சேர்ந்து விட்டது! உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் கீச்... கீச்... என்று சத்தமிட்டது. 
இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். ஒரு காய்ந்த கிளையைக் கடவுள் நீரில் விழ வைத்தார். நானும் சற்று முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி : கடவுள் நம்பிக்கையும், நமது முயற்சியும் நிச்சயம் காப்பாற்றும்!
- ஜோ.ஜெயக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com