அங்கிள் ஆன்டெனா

அதிவேகமாக ஓடக்கூடிய மான்களைக்கூட சிங்கம் புலி போன்றவை அடித்துச் சாப்பிட்டு விடுவதை டிஸ்கவரி சேனலில் அடிக்கடி காட்டுகிறார்கள்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: அதிவேகமாக ஓடக்கூடிய மான்களைக்கூட சிங்கம் புலி போன்றவை அடித்துச் சாப்பிட்டு விடுவதை டிஸ்கவரி சேனலில் அடிக்கடி காட்டுகிறார்கள். மான்கள் இப்படி அநியாயமாக உயிரிழப்பதற்காகாத்தான் படைக்கப் பட்டுள்ளனவா?
 பதில் :அதெல்லாம் இல்லை... சிங்கம் புலிகளை விடவும் விரைவாக ஓடக்கூடிய சிறுத்தைக்கே சிலவகை மான்கள் பெப்பே காட்டிவிட்டு ஓடக்கூடியவை.
 பொதுவாக சிங்கம், புலி போன்றவை வேட்டையாட வரும்போது மான்கள் கூட்டணி அமைத்துக் கொள்ளும். இப்படிக் கூட்டம் கூட்டமாக இருக்கும் மான்களைக் கண்டால் பெரிய விலங்குகள் ஒதுங்கித்தான் சென்றுவிடும்.
 அதனால்தான் கூட்டத்தில் இருந்து ஒரு மானை தனித்துப் பிரித்துதான் சிங்கம், புலி போன்றவை வேட்டையாடும்.
 ஆனால், கென்யா, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் இம்பாலா என்று ஒரு வகை மான் இருக்கிறது. தரையில் காலை ஊன்றி ஒரு ஜம்ப் செய்தால் 10 அடி உயரத்துக்கு ஜிவ்வன்று கிளம்பும். 30 அடி தூரத்தை ஒரே தாவில் கடக்கும்.
 இந்த மான்களின் சிறப்பம்சம், எக்காரணம் கொண்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து விடாது. சிறுத்தையின் பிரித்தாலும் சூழ்ச்சி இந்த வகை மான்களிடம் செல்லுபடியாகாது. வேறு வழியில்லாமல் சிறுத்தை "சீச்சீ... இந்த மான் புளிக்கும்!' என்று ஓடி விடும்....
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலியால் ஏதெனும் பயன் இருக்கிறதா?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com