சிறுவர்மணி

நூல் புதிது!

5th Oct 2019 07:05 PM

ADVERTISEMENT

சிங்கப்பூர் -மலேசியா சிறுவர் சுற்றுலா

ஆசிரியர் - கொ.மா.கோதண்டம்
பக்கம் - 112
விலை - ரூ 100/-
சிங்கப்பூரின் நில அமைப்பு, பேசும் மொழிகள், நாணயம், தொழில்கள் முதலிய தகவல்களுடன் ஆரம்பித்து, அதன் வரலாறு, அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், புண்ணிய மதத் தலங்கள், கோயில்கள், அனைத்தையும், சிறுவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் சிறப்பாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். விளையாட்டாக சிறுவர் சிறுமிகளுடன் உரையாடல்கள் மூலமாகப் பயணம் தொடர்கிறது. சுவையான புத்தகம்! வெளியிட்டோர் - சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை - 600059. தொலைபேசி - 044 - 2239981.


வண்ணம் மாறிய குள்ளநரி

ஆசிரியர் - ருக்மணி சேஷசாயி
பக்கம் - 72
விலை - ரூ 80/-
படிப்பினையைப் புகட்டும் பழைய பஞ்ச தந்திரக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளை மெருகேற்றித் தந்திருக்கிறார் ஆசிரியர். சிங்கமும் சுண்டெலியும், மானும் காகமும், துஷ்டரைக் கண்டால் தூர விலகு போன்ற 18 கதைகளின் தொகுப்பு. கதைகள் வாழ்க்கைப் பாடத்தை நன்றாக சிறுவர்களுக்கு சொல்லித்தருகின்றன. ஆசிரியரை நிச்சயம் பாராட்டலாம். குழந்தைகளுக்கு நமது நாட்டுபண்பாட்டையும் வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க இது ஒரு நல்ல புத்தகம்! அவசியம் படித்துப் பயன் பெற வேண்டிய புத்தகம். வெளியிட்டோர் - சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை - 600078. கைபேசி - 9444799569.

ADVERTISEMENT


வானமே எல்லை

ஆசிரியர் - தீபம் எஸ்.திருமலை
பக்கம் - 176
விலை - ரூ 150/-
76 கதைகளின் இனிய தொகுப்பு! அனைத்தும் மிக ஆர்வத்தைத் தூண்டும் கதைகள்! இந்தியக் கதைகள் தவிர பல்வேறு தேசக் கதைகளும் அடங்கியுள்ள புத்தகம்!  புத்தகத்தை எடுத்து விட்டால் போதும்! படிக்க ஆரம்பித்து விட்டால் போதும் கீழை வைக்க முடியாது! அத்தனை கதைகளும் சிறுவர்களுக்கான அருமையான கதைகள்! சிறுவர், சிறுமிகள் வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து அதை மேலும் உயர்த்திக் கொள்ள நிச்சயம் உதவும்! பொறுக்கி எடுத்த கதை மணிகள்! வெளியீடு - சஞ்சீவியார் பதிப்பகம், ஈ1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், பழைய எண் 11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600015. தொலைபேசி - 044 - 24890151.


ஆட்டுக்குட்டியும் ஓநாயும்

ஆசிரியர் - பாவலர் மலரடியான்
பக்கம் - 80
விலை - ரூ 70/-
பொதுவாக பாடல்களே இசையுடன் கூடிய இனிய அநுபவத்தை அளிக்கும். அந்தப் பாடலில் நீதியுடன் கூடிய கதைகளை அளித்து விட்டால்?.... சிறுவர்களுக்கு பழம் நழுவிப் பாலில், அல்லது தேனில் விழுந்தது  போல்தான்! அன்னமும் கொக்கும்,..... ஆட்டுக்குட்டியும் ஓநாயும்,.... உண்மை பேசுங்கள்.... போன்ற தலைப்புகளில் 22 அழகிய ஆர்வத்துடன் இசைக்கத் தோன்றும் கதைப்பாடல்கள்! சிறுவர்களு நாட்டிய நாடகமாக இவற்றை நடிக்கலாம்! பள்ளிகளுக்குப் பயன் உள்ள புத்தகம்! பள்ளி விழாக்களில் இந்தப் பாடல்களை பாடலுடன் கூடிய ஆடல் நிகழ்ச்சியாக நடத்தலாம்! அருமையான புத்தகம்! வெளியிட்டோர் - பாவைமதி வெளியீடு, 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை - 600081. கைபேசி - 9444174272.


ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள்!

ஆசிரியர் - அரு.வி.சிவபாரதி
பக்கம் - 96
விலை - ரூ 80/- 
வெட்டி வேலை,.....இரண்டும் ஒன்றுதான்,....கடல் ராஜன் மகள், நன்றி!,.... போன்ற தலைப்புகளில் ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ள புத்தகம்! கதைச் செறிவும், கற்பனைச் செறிவும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கு நல்ல புத்தக விருந்து! வெளியிட்டோர் - ஜீவா பதிப்பகம், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600017. கைபேசி - 9952079787.

ஆகாயத்தில் ஆரஞ்சு - சிறுவர்கவிதைகள்

ஆசிரியர் - குழ.கதிரேசன், 
பக்கம் - 72
விலை - ரூ 90/-
ஆகாயத்தில் ஆரஞ்சு,..... எப்படி அம்மா பிடிப்பது?,.... வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு,..... வானத்தில் அழகிய சூரிய நிலவு,.... போன்ற அருமையான 21 பாடல்கள்! கை தட்டிப் பாடி மகிழக்கூடியவை! ""பழுத்து உருண்டு வருகுது,.... பறித்துத் தின்ன முடியுமா?''.... ""ஆகாயத்தைப் பிடிக்கும் தென்னை அழுக்குத் தண்ணீர் குடிக்குது - அது - இளநியாக மாறி நமக்கு இனிக்கும் தண்ணீர் தருகுது!'' போன்ற வரிகள் நினைவை விட்டு அகலாது! குழந்தைகளுக்குப் பாடிக்காட்ட வேண்டிய பாடல்கள்! மிக அற்புதமான பாடல்கள்! வெளியிட்டோர் - ஐந்திணைப் பதிப்பகம், அட 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை - 600040, கைபேசி - 9941460109.

ADVERTISEMENT
ADVERTISEMENT