சிறுவர்மணி

கடி

5th Oct 2019 07:09 PM

ADVERTISEMENT


""போஸ்ட் மேன் சார்!..., எங்கப்பாவுக்கு எதாவது லெட்டர் இருக்கா?''
""உங்கப்பா பேரு என்ன?''
""அது அந்த லெட்டர்லியே இருக்குமே!...''

உ.இராஜமாணிக்கம், கோண்டூர்.

 

""ஏண்டா,..... கணக்கு ஹோம் ஒர்க் 
பண்றியா?....  நான் வேணும்னா எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?''
""வேண்டாம்ப்பா!..... நானே கணக்கைத் தப்பாப் போட்டுக்கறேன்!''

ADVERTISEMENT

ஜோ.ஜெயக்குமார்,  நாட்டரசன் கோட்டை.

 


""அவன் சரியான தீனிப்பண்டாரம்னு நெனைக்கிறேன்!''
""ஏன் அப்படிச் சொல்றே?''
""உலகம் எப்படி இருக்கும்னு கேட்டேன்... "சும்மா லட்டு மாதிரி இருக்கும்!' னு 
சொல்றான்!''

அ.காயத்ரி தேவி, 18/3, நடராஜ தோட்டம், சென்னை - 600019.
""அடிபட்டுடுச்சு,.... கொஞ்சம் மருந்து குடேன்...''
""அடடா!... மருந்து இல்லையே!''
""மருந்துக்குக் கூடவா மருந்து இல்லே?''

க.பழனிசாமி, கோயம்புத்தூர்.""அழகா இருக்கணும்னா என்ன பண்ணனும்?''
""வெரி சிம்பிள்!.... "அழகு'ன்னு பேர் வெச்சுக்கணும்!''

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

 


""கால்லேதானே காயம்!.... எதுக்கு கண் டெஸ்ட் எடுக்கச் சொல்றாங்க?''
""கண்ணாலே சரியா பாக்காமத்தானே தடுமாறி விழுந்து கால்லே அடிபட்டுக்
கிட்டீங்க,.... அதான்!''

பொ.பாலாஜி, அண்ணாமலை நகர் - 608002.

ADVERTISEMENT
ADVERTISEMENT