சிறுவர்மணி

குறள் பாட்டு

23rd Nov 2019 11:10 AM

ADVERTISEMENT

பண்புடைமை
 பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 6
 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அது இன்றேல்
 மண்புக்கு மாய்வது மன்.
 - திருக்குறள்
 நல்ல குணம் உள்ளவர்கள்
 நன்மை செய்யும் இனியவர்கள்
 பூமியிலே இருப்பதனால்
 இன்னும் உலகம் வாழ்கிறது
 
 இல்லையென்றால் இவ்வுலகம்
 இன்னும் உயிர் வாழாது
 மண்ணோடு மண்ணாகி
 ஒழிந்து போய்விடும்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT