மிதுன்!

மிதுன் தாத்தாவிற்கு மருந்து போடுகிறான். அம்மா பழச்சாறுடன் வருகிறார்.
மிதுன்!

அரங்கம்
 காட்சி : 1

 இடம் : மிதுனின் வீடு / தோட்டம்
 நேரம் : காலை 10 மணி
 மாந்தர் : மிதுன், தாத்தா, அப்பா
 (மிதுன் மர நிழலில் அமர்ந்திருக்கிறான் . அவன் திறன்பேசியில் காணொலியைப் பார்ப்பதில் தீவிரமாயிருக்கிறான்.....மிதுனுக்கு அருகில் இருக்கும் கார் ஷெட்டின் மீது தென்னை ஓலையை வேய்கிறார் தாத்தா. அப்பா வருகிறார்.)
 அப்பா : என்னப்பா பண்ணிட்டிருக்கீங்க, சாப்டாச்சா ?
 தாத்தா : சாப்டாச்சுப்பா....
 அப்பா : காலையில இதென்ன வேலை?
 தாத்தா : இந்த சிமெண்ட் ஷீட்டுக்கு கீழ குருவிக் கூடு ஒன்னு இருக்கு... பாவம்.. அனல் தாங்காம வாயைப் பொளந்துட்டு மூச்சு வாங்குதுங்க.... அதான் கொஞ்சம் வெக்கையை கொறைக்க ஏற்பாடு பண்ணறேன்.....
 அப்பா : (மிதுனிடம்) ஏன்டா.. இங்கதான இருக்க.. தாத்தாக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்லாம்ல..
 மிதுன் : (தலை நிமிராமல்) அப்பவே கேட்டேன்.. அவர்தான் வேண்டாம்னாரு..
 தாத்தா : ( அப்பாவிடம்) அவன் ஏதோ பண்ணிட்டுப் போறான் விட்றா.. இது ஒரு சின்ன வேலைதான்..
 அப்பா : (தாத்தாவிடம்) நான் எதாவது உதவி பண்ணட்டுமா-ப்பா?
 தாத்தா : அவ்ளோதான்...! முடிஞ்சுது.. நீ போய் தர்பூசணி வாங்கிட்டுவா ஜூஸ் போடலாம் ..
 அப்பா : (மிதுனிடம்) ம்ம்ம்.. உள்ள அம்மா திட்றாங்கனு இங்க வந்து உக்காந்துட்ட .
 (மிதுன் காணொலியில் மூழ்கியிருக்கிறான்.....அப்பா செல்கிறார்.....தாத்தாவின் கண்களில் தூசி விழுகிறது. விரலால் தேய்க்கிறார்.)
 
 காட்சி : 2
 
இடம் : மிதுனின் வீடு / ஹால்
 நேரம் : மாலை 5 மணி
 மாந்தர் : மிதுன், தாத்தா.
 (மிதுன் முகம் கழுவிவிட்டு துண்டால்
 துடைக்கிறான்.....தாத்தா வருகிறார்.)
 தாத்தா : மிதுன்.. பூமணி டாக்டர்கிட்ட ஒரு
 கண் மருந்து வாங்குனம்ல.. அதை எங்காவது
 பார்த்தியா ?
 மிதுன் : மருந்து வாங்கினோமா, எப்போ?
 தாத்தா : போன வருஷம்..
 மிதுன் : ஏன் தாத்தா, நீ வேறே.. அந்த மருந்தெல்லாம் எக்ஸ்பயர் ஆகியிரும்.. அதை ஏன் போடறே.. பேசாம இரு..
 (தாத்தா அமைதியாக இருக்கிறார்.....மிதுன் தொலைக்காட்சியைப் போட்டு ரிமோட்டை எடுத்துக்கொண்டு சோஃபாவில் சாய்கிறான்.....தாத்தா ஒவ்வொரு பேழையாகச் சென்று தேடுகிறார்.)
 
 காட்சி : 3
 இடம் : மிதுனின் வீடு
 நேரம் : காலை 7 மணி
 மாந்தர் : மிதுன், தாத்தா, அப்பா
 (மிதுன் உறக்கம் கலைந்து எழுகிறான்.......
 வெளியே தாத்தாவின் குரல் கேட்கிறது.)
 தாத்தா : (குரல்) எதுக்குடா வீண் செலவு, சாய்ங்காலம் சரியாயிடும்..
 அப்பா : (குரல்) என்ன சரியாயிரும் ? கண்ணு இப்படியிருக்கு, சரியாயிருமா.. எந்திருச்சு சட்டைய போடுங்க போலாம்.. நான் போய் காரை ரெடி பண்றேன்..
 (மிதுன் வெளியே வருகிறான்.
 அம்மாவின் அருகே போய் நிற்கிறான். )
 மிதுன் : என்னாச்சு-மா?
 அம்மா : தெரியலடா.. தாத்தாக்கு ஏதோ கண்ணுல பிரச்சனை போல.. ஒரு பக்கம் வீங்கிப் போய் தண்ணி வழியுது..
 மிதுன் அதிர்ச்சியடைகிறான்.
 மிதுன் : ம்மா.. நானும் அப்பாகூட ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வர்றேன்..
 (மிதுன் வேகமாக தன்னுடைய அறைக்கு ஓடுகிறான்.....அம்மா அவனை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.)
 
 காட்சி : 4
 இடம் : பூமணி மருத்துவமனை / இஞதசஉஅக இகஐசஐஇ
 நேரம் : காலை 10. 10
 மாந்தர் : மிதுன், தாத்தா, அப்பா, பூமணி.
 (பூமணி தாத்தாவின் கண்ணைப்
 பரிசோதிக்கிறார்.....அப்பா அமைதியாக
 இருக்கிறார்......மிதுன் நகம் கடிக்கிறான்.)
 பூமணி : இந்த டைம் வலது கண்ணா.. என்ன தாத்தா, இப்படி ஆயிருச்சே.. எப்போ டஸ்ட் விழுந்துச்சு?
 தாத்தா : நேத்து காலையில, சார். என்னாச்சு?
 பூமணி : நேத்தே வந்திருக்கலாம்.. கண் கருவிழியில புண் ஆயிடுச்சு..
 அப்பா : அதனால என்ன, டாக்டர் ?
 பூமணி : அதனால என்னன்னா... சரியானாலும் ஆகலாம்.. ஆகாமலும் போகலாம்..
 (மிதுனின் முகம் அதிர்ச்சி அடைகிறது. )
 அப்பா : என்ன சொல்றீங்க?
 பூமணி : டோண்ட் வொரி.. நான் மருந்து மாத்திரை கொடுக்கறேன்.. த்ரீ டேஸ் போடுங்க , இல்லனா பெரிய ஹாஸ்பிடல்தான் .. என்ன?
 தாத்தா : சரிங்க, சார். நீங்க கொடுங்க அதுலியே சரியாயிடும்..
 (டாக்டர் பூமணி மருந்துச்சீட்டில் எழுதுகிறார்.
 மிதுன் கண் கலங்கப் பார்க்கிறான்.)
 
 காட்சி : 5
 இடம் : மிதுனின் வீடு / தாத்தா அறை
 நேரம் : மதியம் 1.30
 மாந்தர் : மிதுன், தாத்தா.
 (மிதுன் வருகிறான். தாத்தா கண்களை
 மூடிப் படுத்திருக்கிறார்.)
 மிதுன் : தாத்தா.. ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சு.. மருந்து போடணும்.. எந்திரிங்க..
 தாத்தா : (கண்விழித்து) எந்த மருந்த எப்படி போடணும்னுதான் கொஞ்சம் சொல்லேன்..
 மிதுன் : ஒண்ணும் பெரிய கஷ்டமில்ல, தாத்தா .. ஒரு மருந்த போட்டு பத்து நிமிஷம் கழிச்சு இன்னொன்னு அவ்ளோதான்..
 தாத்தா : எதெ வேணாலும் முன்னாடி போடலாமா.. ?
 மிதுன் : ம்ம்ம், போடலாமே.. நான் எப்டி
 பண்றேன்னா, மொதல்ல அஙஐசஞஎஉச.. அப்றமா
 ழவஙஅலஐஈ.. அதாவது ஃபர்ஸ்ட் அ அப்றமா ழ..
 தாத்தா : சரிப்பா.. அப்போ அடுத்த வாட்டியிலிருந்து நானே போட்டுக்கிறேன்..
 மிதுன் : சும்மா இருங்க, தாத்தா.. நானே வந்து போட்டு விட்றேன்.. இது காமெடியா இருக்கு..
 தாத்தா : காமெடியாவா?
 (தாத்தா சிரிக்கிறார்......மிதுன் அவரை அமைதியாகப் பார்க்கிறான்.)
 
 காட்சி : 6
 இடம் : மிதுனின் வீடு
 மாந்தர் : மிதுன், தாத்தா , அப்பா, அம்மா.
 (காலை நேரம்.... மிதுன் வழிபாட்டு அறையில் இரு கைகளையும் கூப்பி நிற்கிறான்.
 அப்பா தீபம் காட்டுகிறார்.)
 மதியம் : மிதுன் தாத்தாவிற்கு மருந்து போடுகிறான். அம்மா பழச்சாறுடன் வருகிறார்.
 (...இரவு.... மிதுன் தாத்தா உறங்குவதைக் கதவருகே வந்து பார்த்துச் செல்கிறான்.)
 
 காட்சி : 7
 இடம் : பூமணி மருத்துவமனை
 / இஞதசஉஅக இகஐசஐஇ
 நேரம் : காலை 11 மணி
 மாந்தர் : மிதுன், தாத்தா, பூமணி.
 (டாக்டர் பூமணி தாத்தாவின் கண்ணைப்
 பரிசோதிக்கிறார்.....மிதுன் பதற்றமாகப்
 பார்க்கிறான்)
 டாக்டர் பூமணி : ம்ம்ம்.. குட்.. நல்ல விஷயம்தான்..
 மிதுன் : என்ன, சார் ?
 டாக்டர் பூமணி : இப்போ பரவாயில்லை-ப்பா.. புண் ஒரு செவண்ட்டி எய்ட்டி பர்செண்ட் ஆறிடுச்சு..
 (மிதுன் மகிழ்ச்சி அடைகிறான்.
 நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்.. )
 டாக்டர் பூமணி : அதே மருந்து , இருக்கா ? கண்டின்யூ பண்ணா சரியாயிடும்..
 மிதுன் : (சட்டென்று) இருக்கு, சார். வலிக்குப் போட சொன்ன மாத்திரை மட்டும் தீர்ந்திடுச்சு..
 தாத்தா : இப்போ வலியெல்லாம் கொஞ்சம் கூட இல்ல, சார்..
 டாக்டர் பூமணி : ஃபைன்.. த்ரீ டேஸ் அப்படியே போடுங்க.. சரியாயிடும்.. செக்கப்புக்கு வாங்க.. கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்..
 (தாத்தாவும் மிதுனும் மருத்துவருக்கு நன்றி
 சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்கள்.)
 
 காட்சி : 8
 இடம் : மிதுனின் வீடு / மொட்டை மாடி
 நேரம் : இரவு 8.30
 மாந்தர் : மிதுன், தாத்தா.
 (மிதுன் சலவைக் கல்லின் மீது அமர்ந்திருக்கிறான்..... தாத்தா மேலே வந்து தண்ணீர் தேக்கியைத் தட்டிப் பார்க்கிறார்.)
 மிதுன் : டாங்க் ஃபுல்லாயிடுச்சு, தாத்தா.. நாளைக்கு ஷட் டவுன்னு தெரியும்.. காலையில வேணும்னா மோட்டர் போட்டுக்கலாம்..
 தாத்தா : எல்லாம் சரி-ப்பா.. இந்நேரத்துல இங்க என்ன பண்ணிட்டிருக்கே ?
 மிதுன் : சும்மாதான், தாத்தா.. ஏதோ யோசிச்சிட்டு.. என்னை மன்னிச்சிருங்க, தாத்தா..
 (மிதுன் அழத் தொடங்குகிறான்.)
 
 தாத்தா : ஏய். . ஏய். . என்னப்பா, என்னாச்சு?
 மிதுன் : (தேம்பியபடி) அன்னிக்கி நீங்க கண் மருந்து தேடினப்ப நான் எதுக்குனு கூட கேக்காம இருந்திட்டனே , தாத்தா .. கேட்டிருந்தா நைட்டு அப்பா வந்த ஒடனே ஹாஸ்பிடல் போயிருக்கலாம்ல..
 மிதுன் : (முதுகில் தட்டி) என்ன மிதுன் இதெல்லாம்.. அதான் எல்லாமே சரியாயிடுச்சே.. அப்றம் என்ன..
 மிதுன் : சரியாப் போனதால பரவாயில்ல, தாத்தா.. ஒருவேளை.. ( அழுகிறான்)
 தாத்தா : ம்ம்ஸ்ஸ், மிதுன் நான் ஒன்னு சொல்றேன், கேக்கிறியா?
 (மிதுன் தாத்தாவைப் பார்க்கிறான்.)
 
 தாத்தா : நமக்கு ஒரு சோதனை வருதுனா அது நல்லதுக்குத்தான். அதுலருந்து ஏதாவது ஒன்ன நாம கத்துக்கணும்னுதான் கடவுள் அதைக் கொடுக்கிறார். அப்படி நாம கத்துக்கிட்டோம்னா அந்தச் சோதனையை அவரே திருப்பி எடுத்துக்குவார். .
 மிதுன் : உண்மைதான், தாத்தா.. நான் நெறைய விஷயங்கள்ல அலட்சியமாவே இருக்கேன்.. இனிமேல் அப்படி இல்லாம எல்லார்கிட்டேயும் அன்பா, பொறுப்பா நடந்துக்குவேன்.
 (தாத்தா மிதுனை அணைக்கிறார்....மிதுன் கண் கலங்குகிறான்.)
 ( திரை)
 க. சங்கர்
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com