நோட்டீஸ்!

பள்ளிக்கூடம் அருகில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தான் சிவா. அதில் பெரிதாக எழுதப்பட்டிருந்த வாக்கியம் அவனைக் கவர்ந்தது. நேற்று கலா சொன்ன வாக்கியம்! "கரணம் தப்பினால் மரணம்!' 
நோட்டீஸ்!

சூப்பர் சிவா! 9
பள்ளிக்கூடம் அருகில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தான் சிவா. அதில் பெரிதாக எழுதப்பட்டிருந்த வாக்கியம் அவனைக் கவர்ந்தது. நேற்று கலா சொன்ன வாக்கியம்! "கரணம் தப்பினால் மரணம்!' 
ஊரில் மரணக்கிணறு காட்சி நடைபெறுகிறது. அதற்கான விளம்பரம்தான் அது! மோட்டார் சைக்கிளில் ஒரு வீரன் கிணற்றுக்குள் சுற்றுவதுபோன்ற படம் விளம்பரத்தில் இருந்தது! அந்த மனிதன் எப்படி கீழே விழாமல் கிணற்றுக்குள் சுற்றுகிறான்?.... சிவா மனதில் பெரிய கேள்வி எழுந்தது! 
மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தான். மரணக் கிணறு காட்சி நடைபெறும் இடத்திற்குப் போக விரும்பினான். 
வீட்டில் மரணக்கிணறு பற்றிய நோட்டீஸ் கிடந்தது. சினிமா நோட்டீஸ் போன்று அச்சிட்டிருந்தார்கள். 
மரணக்கிணறு தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடந்தது. நோட்டீஸில், காட்சிகள், கட்டண விவரங்கள் எல்லாம் இருந்தன. நோட்டீûஸ சிவா கால்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். நோட்டீûஸ சந்திரா அக்காவிடம் காட்டுவதற்காக அவருடைய வீட்டிற்குப் போனான்.
சந்திரா அக்கா முற்றத்தில் அமர்ந்து மல்லிகைப் பூ கட்டிக்கொண்டிருந்தார். அவர் அருகில் போய் உட்கார்ந்தான். பூ கட்டிக்கொண்டிருந்த நூல் கண்டில் விளையாடினான். 
"அதை வைடா.... பிரிச்சி விட்டிராத!...'' என்றார் அக்கா. சிவா உடனே நூல் கண்டை வைத்துவிட்டான். 
"என்னடா, ஆளை ரெண்டு நாளா காணோம்!.... மாமா மகளை விட்டு வர மனமில்ûயா?...'' என்று அக்கா சிரித்துக் கொண்டே கேட்டார்.
"போங்க அக்கா...'' என்று சிவா வெட்கம் காட்டினான். 
"சரிடா, என்ன விஷயம்?...'' என்று அக்கா கேட்டவுடன் சிவா மரணக்கிணறு நோட்டீûஸக் காட்டினான்.
"நீ பாத்துட்டீயா?.... பார்க்க பயங்கரமா இருக்காம்!....'' என்றார் அக்கா. 
"பயங்கரமா எப்படி?''
"இந்த சுவர்லே உன்னால் நடக்க முடியுமா?.... அதுலே பைக் ஓட்டுறான்!.... கரணம் தப்பினால் மரணம்!'' என்று அக்கா சொன்னாள்.
"நானும் பார்க்கலாம்னு இருக்கேன்!... வீட்டிலே கூட்டிட்டுப் போவாங்களான்னு தெரியலே...'' என்றான் சிவா. 
இருட்டியதும் மரணக் கிணறு நடக்கும் தெப்பக்குள மைதானத்திற்கு சிவா போனான். "டியூப் லைட்' வெளிச்சத்தில் அந்த இடம் பகலாகத் தெரிந்தது. சில கலர் டியூப் லைட்டுகள் அணைந்து எரிந்து வேடிக்கை காட்டின. வட்டமான டெண்ட் கொட்டகைக்குள் மரணக் கிணறு காட்சி நடந்தது. கிணற்றுக்குள் ஒரு வீரன் பைக்கில் சுற்றும் காட்சிகள் வரைந்திருந்த பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. கொட்டகையின் முன்புறம் ஓரத்தில் முன் பக்கம் சதுர வடிவத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. மேடையின் பின்புறம் சாத்தப்பட்டிருந்த ஏணியின் வழியாக ஒரு பெண்ணும் ஆணும் மேடைக்கு ஏறி வந்தார்கள். கூட்டத்தினரைப் பார்த்து வணங்கினார்கள். நடிகை, நடிகர்கள் மாதிரி "மேக்கப்' போட்டிருந்தார்கள். அவர்கள் வணங்கியதும் கூட்டத்திலிருந்து விசில் சத்தமும் கை தட்டலும் கேட்டன.
சிறிது நேரத்தில் சினிமா பாட்டு ஒலித்தது. அதற்கேற்ப மேடையில் நின்றிருந்த இருவரும் ஆடினார்கள். மரணக்கிணறு காட்சியை பார்க்க கூட்டம் சேர்ப்பதற்காக இந்த நடனம்! கூட்டத்தினர் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆட்டம் பார்த்தது போதும் என்று சிவா புறப்பட்டான். அப்போது பாட்டுச் சத்தம் நின்றது. மரணக்கிணறு கொட்டகைக்குள்ளிருந்து "டப...
டப...டப' என்று மோட்டார்பைக் சத்தம் அலறியது! அவன் மனக்கண்ணில் ஒருவன் கிணற்றின் சுவரில் வேகமாக "பைக்' ஓட்டும் காட்சி தெரிகிறது. அவன் எப்படிக் கீழே விழாமல் ஓட்டுகிறான் என்ற கேள்வி அவன் மண்டையைக் குடைந்தது.
அப்பா வந்தாச்சு!
சிவா வீட்டுக்கு வந்தான். "தினமும் ஊரைச் சுத்திட்டு வர்றே!..... அப்பாகிட்டே சொல்றேன்!...'' என்று அம்மா கத்தினாள். அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் "நம்ம ஊருக்கு மரணக்கிணறு வந்திருக்கு!... பார்க்கப் போகலாம்!'' என்றான்.
"அப்பா கிட்டே சொல்றேன்.... கூட்டிட்டுப் போவாங்க...'' என்றாள் அம்மா.
"போனமுறை சர்க்கஸுக்கும் அப்படித்தான் சொன்னீங்க.... கூட்டிட்டுப் போகலே...'' என்றான் உதயன்.
தம்பி கேட்டது சிவாவுக்கு உற்சாகமாக இருந்தது. ஆனால் அப்பாவிடம் தங்கை கேட்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்று சிவா நினைத்தான். தங்கை ஜெயாவிடம், "அப்பா வந்ததும் மரணக்கிணறு பார்க்கப் போகலாம்னு கேளு...'' என்று சொன்னான். 
"பேரைப் பாரு!...."மரணக்கிணறு!' ...அபசகுனமா.... வேறே நல்ல விஷயத்தைப் பார்த்தாக்கூட பரவாயில்லே...'' என்றாள் அம்மா.
"கிணற்றுக்குள் கீழே விழாம பைக் ஓட்டுகிறான்!... அது எப்படின்னு பார்க்க வேண்டாமா?...'' என்று கேட்டான் சிவா.
"ஆமா..., பாத்து,.... நீயும் சாகசம் பண்ணப்போறியா?'' என்று அம்மா வினவினாள்.
சிவா நினைத்தது சரியாக இருந்தது. தங்கை ஜெயா கேட்டதும் அப்பா கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிவிட்டார். ஞாயிற்றுக் கிழமை போகலாம்னு சொன்னார். 
ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் மூன்று தினங்கள் இருந்தன. அதுவரை அவன் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான். 
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக் காட்சிக்கு கூட்டிப் போவதாக அப்பா சொல்லியிருந்தார். எல்லோரும் வீட்டில் தயாராக இருந்தனர். அப்பா 7-30 மணி வரை வரவில்லை. தரையில் விழுந்த புழுவாக சிவா துடித்தான். வாசலுக்கு வந்து தெருவை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா தலை தெரிந்ததும் "அப்பா வந்தாச்சு!'' என்று கத்தினான். போவதற்குள் காட்சி ஆரம்பித்து விடக்கூடாது என்று சிவா வேண்டிக்கொண்டான். 
மைதானத்தை நெருங்கும்போது பாட்டு சத்தம் கேட்டது. இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது சிவாவுக்குத் தெரிந்துவிட்டது. அப்பா டிக்கட் வாங்கிட்டு வரும் வரை அவர்கள் காத்திருந்து உள்ளே போனார்கள். உயரமான கேலரியில் உட்கார்ந்தார்கள். கிணறு மத்தியில் தெரிந்தது. காட்சி ஆரம்பிக்க இருந்தது. கிணற்றுக்குள் தரையில் "பைக்' குடன் சாகச வீரன் நின்று மேலே இருப்பவர்களுக்கு கையசைத்துக் கொண்டிருந்தான். அவன் பைக்கில் ஏறி அமர்ந்ததும் சிவாவும் நிமிர்ந்து உட்கார்ந்தான். 
சாகச வீரன் முதலில் தலையில் மெதுவாக "பைக்' ஓட்டினான். பிறகு வண்டி "டப...டப' என்று வேகம் எடுத்தது! கண்ணிமைக்கும் நேரத்தில் அது கிணற்றுச் சுவரில் "விர்...விர்...' என்று சுற்றியது! சிவா உன்னிப்பாக கவனித்தான். "பைக்' கை வேகமாக இயக்கிய சாகச வீரன் அதை நிதானப்படுத்தி தரையில் இறக்கி நிறுத்தினான்! காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கையசைத்தான். எல்லோரும் கை தட்டினர். சிவாவும் கை தட்டினான். 
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com