22 செப்டம்பர் 2019

கடி

DIN | Published: 18th May 2019 10:00 AM

* "ம்ஹூம்.... ஒண்ணு மே வரலையேடா!....''
"யார் சொன்னது?.... "மே' ஒண்ணு வந்ததே!....'' 
இளவல் ஹரிஹரன், சி 31, மல்லிகை, 91, ஏ.பி.கே. மெயின் ரோடு, வில்லாபுரம், 
மதுரை - 625012.

* "ஏண்டா ஸ்லோவா ஓடிவர்றே?''
"ஆமை வடை சாப்பிட்டேண்டா!''
டி.மோகன்தாஸ், 95ஏ, காமராஜபுரம், நாகர்கோயில் - 629001.

* "நார்த்தங்காய் அதிகமா விளையற இடம் எது?''
"நார்த் இண்டியான்னு நினைக்கிறேன்!...''
ம.அக்ஷயா, அரூர்.

* "தப்புப் பண்ணா வர்ற பயத்துக்கு என்ன பேர்...தெரியுமா?...''
"நீயே சொல்லு...''
"வினை அச்சம்!....''
பர்வதவர்த்தினி, சென்னை.
அரவக்குறிச்சிப்பட்டி, அசூர் - 620015.

* "ரமேஷ்!..., என்னை எல்லாரும்
இங்கிலீஷ்லே புலின்னு சொல்லிப்
பாராட்டுறாங்க!....''
"அதெப்படி இங்கிலீஷ்லே "டைகர்' ன்னுதானே பாராட்டணும்!''
சி.ஆர்.ஹரிஹரன், அலுவா - 638108.

* "நான் அஞ்சு வயசிலேயே டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்!''
"அதான் ஆயிட்டீங்களே....அப்புறம் என்ன கவலை?''
"அஞ்சு வயசிலே ஆகமுடியலையே!....''
ஜி.சுந்தரராஜன், 1, அன்னப்ப பிள்ளை சந்து, எஸ்.என்.புரம் ரோடு, திருத்தங்கல் - 626130
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இரண்டு தேவதைகள்!
அங்கிள் ஆன்டெனா

புற்று நோய்க்கு அருமருந்து சிமரூபா மரம்!
 

பொருத்துக...
விடுகதைகள்