கல்வியும் செல்வமும்

காளிங்கன் என்று ஓர் அரசன் இருந்தான். இவன் கோடிக்கணக்கான திரவியம் உள்ளவன். விலை உயர்ந்த அணிகலன்களை எப்போதும் அணிந்து கொண்டிருப்பான். யாரையும் மதிக்கமாட்டான்.
கல்வியும் செல்வமும்

காளிங்கன் என்று ஓர் அரசன் இருந்தான். இவன் கோடிக்கணக்கான திரவியம் உள்ளவன். விலை உயர்ந்த அணிகலன்களை எப்போதும் அணிந்து கொண்டிருப்பான். யாரையும் மதிக்கமாட்டான். தனக்கு சமமானவர் ஒருவருமே இல்லை என்று கர்வம் கொண்டவன். இவனிடம் ஏழைப் புலவர் ஒருவர் பாடி பரிசில் பெற வந்தார்.
 அரசன் அந்தப் புலவரிடம் ""நீர் புலமைக்காக வீணாக காலத்தை போக்கிவிட்டீர். பணத்தைத் தேடியிருந்தால் நன்றாய் உண்டு உடுத்து சுகமாக இருக்கலாம். அநியாயமாய் கெட்டுவீட்டீர்'' என்று உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.
 "அரசே உம்முடைய அணிகலன்கள் உபயோகமற்றவை. நாளுக்கு நாள் தேய்ந்து போவன. பிறரால் கவரப்படுவன. பெரும் பாரமாயிருப்பன. என்னிடதிலுள்ள ஆபரணமான கல்வியோ யாதொரு குற்றமுமில்லாத உத்தமமான அணிகலன்'' என்றார்
 அரசன் புலவரிடம் சவால் விட்டான். ""நீர் உம்மிடத்திலுள்ள ஆபரணத்தை எடுத்துக் கொள்ளும். நானும் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு பேரும் தேசாந்தரம் போவோம்.''
 இருவரும் அடுத்த ராஜ்ஜியம் சென்றனர். புலவர் அரசரைச் சந்தித்தான். அவர் புலவரின் பெருமையை கல்வியை அறிந்து தன் கூட வைத்துக் கொண்டான்.
 அரசனோ, அந்த நகரில் ஒரு மாளிகை வாடகைக்கு எடுத்து வசிக்கையில் ஒரு நாள் இரவு திருடர்கள் பணம், நகைகளை அபகரித்துக் கொண்டு போய்விட்டார்கள். எல்லாவற்றையும் பறிகொடுத்து வெறுங்கையோடு நின்றான். அரையாடை தவிர கையில் எதுவும் இல்லை. பட்டினி கிடந்தான். புலவர் அவன் நிலை அறிந்து அரசனிடம் பணம் பெற்று அவனக்கு கொடுத்து உதவி அவன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அரசன் புலவரின் பெருமையை அறிந்து கொண்டான். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணர்ந்து கொண்டான்.
 -மயிலை மாதவன், சென்னை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com