வாத்துக்களின் பிரார்த்தனை!

காட்டின் எல்லையில் ஒரு விவசாயிக்குச் சொந்தமான ஒரு பண்ணை இருந்தது. அதில் ஒரு வாத்துக் கூட்டம் வசித்து வந்தது. அருகிலுள்ள குளத்தில் நீந்திவிட்டு மாலையில் பண்ணைக்குத் திரும்பும்.
வாத்துக்களின் பிரார்த்தனை!

காட்டின் எல்லையில் ஒரு விவசாயிக்குச் சொந்தமான ஒரு பண்ணை இருந்தது. அதில் ஒரு வாத்துக் கூட்டம் வசித்து வந்தது. அருகிலுள்ள குளத்தில் நீந்திவிட்டு மாலையில் பண்ணைக்குத் திரும்பும்.
 இதைக் கவனித்த நரி ஒன்று பின்னிரவில் பண்ணைக்குள் நுழைந்தது. பசியோடு இருந்த நரி வாத்துகளை நெருங்கியது. "இன்று சரியான விருந்துதான்!.... ‘‘ என்று மகிழ்ச்சி அடைந்தது.
 நரியைக் கண்ட வாத்துகள் திகைப்படைந்தன. வாத்துகளின் தலைமை வாத்துக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னுடைய திட்டத்தை மிக மெதுவான குரலில் மற்ற வாத்துகளுக்கு அது தெரிவித்தது.
 பின்பு நரியை நோக்கிய தலைமை வாத்து, "ஐயா..., எங்களில் யாராவது உங்களுக்கு விருந்தாவது நிச்சயம்!.... எங்களுள் யாராவது இறப்பதற்கு முன்னால் பிரார்த்தனை செய்வது வழக்கம்!.... இப்போதும் அது போல் செய்ய வேண்டும்...'' என்றது நரி சம்மதித்தது.
 வாத்துகள் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல உரக்கக் கத்தின!.... வாத்துகளின் கூக்குரலைக் கேட்ட பண்ணை உரிமையாளர் உடனே வந்தார். நரி நிற்பதைப் பார்த்தார்.
 தடியால் நரியை நையப் புடைத்தார். நொண்டிக் கொண்டே நரி ஓடிப் போனது. சாமர்த்தியத்தால் வாத்துகள் தப்பின.
 தந்திரத்தின் வலிமை சிறியது....சிந்தனையின் வலிமையோ பெரியது!
 ஈசாப் நீதிக்கதைகளிலிருந்து....
 நெ.இராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com