சிறுவர்மணி

பொன் மொழிகள்

29th Jun 2019 10:34 AM | உ.ராமநாதன், நாகர்கோவில்

ADVERTISEMENT


எவனொருவன் முயற்சியைக் கைவிடுகிறானோ அப்போதே அவன் சக்தி அவனிடமிருந்து விரைந்து போய்விடுகிறது

-ஐன்ஸ்டின்

 

எந்த வேலையையும் செய்யாதவன் மட்டுமல்ல தனக்கு தகுதி இல்லாத வேலையில் இருப்பவனும் சோம்பேறிதான்

ADVERTISEMENT

-சாக்ரடீஸ்

 

இலட்சியப் பாதையில் போகும் போது திரும்பிப் பார்க்காதே

-சைரஸ்

 

உழைப்பவர் கைகளில் தான் உலகம் இருக்கிறது

-காந்திஜி

 

கல்வியின் மிகப்பெரிய நோக்கம் அறிவைச் சார்ந்தது அல்ல. செயலைச் சார்ந்தது.

-ஹெர்பர்ட் ஸ்பென்சர்

 

அறிவுள்ள ஒருவன் நிகழ்த்தும் ஒரு உரையாடல் ஒரு மாதகாலத்தில் படித்த புத்தகங்களுக்கு சமம்

-சீனப்பழமொழி

 

உங்களால் நூறு ஏழைகளுக்குச் சாப்பாடு போட முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஏழைக்கு உங்களால் சாப்பாடு போட முடியும்.

-அன்னை தெரசா

 

நேரத்தின் மதிப்பு அருமை தெரிந்த மனிதனுக்கு வாழ்க்கையின் மதிப்பும் அருமையும் தெரியும்

-நெல்சன்

 

வெற்றியிள் போது மட்டுமே மகிழ்ச்சியில் திளைப்பது பெருமை அல்ல. தோல்வியின் போதும் மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்வது பெருமை

-ஆண்டர்சன்

ADVERTISEMENT
ADVERTISEMENT