ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்கிற பண்டிதரை சந்தித்தார். அவர் வித்வானாக மட்டுமின்றி, ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார்.
அவர் ராமகிருஷ்ணரிடம், ""கடவுள் ஒன்றே எனினும் இத்தனை தெய்வ உருவங்கள் எதற்கு?'' என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ""ஒரு குளத்திற்கு பல கரைகள் உண்டு. அதன் ஒரு கரையில் நீர் எடுக்கும் இந்து, அதனை "தீர்த்தம்' அல்லது "ஜலம்' என்று அழைக்கிறான். ஒரு முகம்மதியன் அதனை "பானி' என்று அழைக்கிறான். ஆங்கிலத்தில் அதை "வாட்டர்' என்று அழைக்கிறார்கள். இருப்பினும், அனைத்து வார்த்தைகளும் தண்ணீரைத்தான் குறிக்கின்றன.
எப்பெயரில் அழைத்தாலும் கடவுளின் தன்மையோ, மகிமையோ மாறாமலேயே இருக்கிறது. கடவுளை அடைவதற்கு ஒருவனுக்குச் சிறந்த பக்தியும், அன்பும், உண்மையான நம்பிக்கையுமே வேண்டும்'' என்று கூறினார்.