செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

விடுகதைகள்

DIN | Published: 22nd June 2019 10:39 AM

1. விடாது மழை பெய்தாலும் நீருக்குள்ளே அசையாமல் கிடப்பான் எங்கள் கருப்பன்...
 2. எக்கச்சக்கமான பற்கள் இருந்தாலும் இவனுக்குக் கடிக்கத் தெரியாது...
 3. பறிக்கப் பறிக்கப் பெரிதாகிக் கொண்டே போவான் இவன்...
 4. பின்தொடர்ந்து வருபவனுக்குப் பேசத் தெரியாது...
 5. விண்ணிலே பறந்தாலும் இந்தப் பறவை ஓய்வெடுப்பது என்பது பூமியில்தான்...
 6. இந்த வெள்ளையனுக்குப் பிறந்த இடமே பகை...
 7. அச்சே இல்லாத சக்கரம், அழகிய வண்ணச் சக்கரம்...
 8. பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்பவன், ஆனாலும் இவன் சமூக சேவகன் அல்ல...
 விடைகள்:
 1. எருமை, 2. சீப்பு
 3. குழி, 4. நிழல்
 5. விமானம், 6. உப்பு
 7. வளையல், 8. பசை
 -ரொசிட்டா
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்